செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூர்! கனிமொழி எம்.பி. உள்பட 40 பேர் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!

post image

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீதான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு எம்.பி.க்கள் விளக்கமளிக்கவுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில், ஏப்ரல் 22 ஆம் தேதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதியில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தாக்குதலை இந்திய ராணுவம் முன்னெடுத்தது.

இந்த நடவடிக்கை தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதுடன், 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மேலும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போதே, அதுகுறித்து உலகின் முக்கிய நாடுகளுக்கு விளக்கமளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. அந்த வகையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து முக்கிய நாடுகளுக்கு விளக்கமளிக்க நாடாளுமன்ற எம்.பி.க்களை மத்திய அரசு நியமித்துள்ளதாகத் தெரிகிறது. காஷ்மீர் மற்றும் எல்லைதாண்டிய பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை முன்வைக்க, பல்வேறு நாடுகளுக்கு எம்.பி. குழுக்களை அனுப்புவது இதுவே முதல்முறையாகும்.

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், பாஜக எம்.பி.க்களான ரவிசங்கர் பிரசாத் மற்றும் பைஜயந்த் பாண்டா, திமுக எம்.பி. கனிமொழி, ஒருங்கிணைந்த ஜனதா தள எம்.பி. சஞ்சய் குமார் ஜா, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) எம்.பி. சுப்ரியா சுலே, சிவசேனை எம்.பி. ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் தனித்தனியாக குழுக்களை தலைமை வகிப்பதுடன், ஒவ்வொரு குழுவிலும் வெவ்வேறான கட்சிகளின் எம்.பி.க்கள் அடங்கிய 5 முதல் 8 பேர் இருப்பர்.

சுமார் 40 எம்.பி.க்கள் அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு 10 நாள் சர்வதேச சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இந்தக் குழுக்கள் அடுத்த வாரம் புறப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தெலங்கானாவில் இஸ்ரேல் கொடியை அகற்றியவர் கைது!

தெலங்கானா மாநிலத்தில் இஸ்ரேல் கொடியை அகற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெலங்கானாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியை முன்னிட்டு, ஹைதரபாத்திலுள்ள அம்மாநில அரசின் தலைமைச் செயலகம் அருகில் இஸ்ரேல் நாட்டின... மேலும் பார்க்க

கேதார்நாத்தில் எய்ம்ஸ் ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்

தொழில்நுட்பக் கோளாறு கேதார்நாத்தில் எய்ம்ஸ் ஹெலிகாப்டர் சனிக்கிழமை அவசரமாக தரையிறக்கப்பட்டது. உத்தரகண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் நிறுவனத்தால் 'சஞ்சீவனி' எனும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் இயக்கப்பட... மேலும் பார்க்க

உத்தரகண்ட்: புனித யாத்திரைத் தலங்களை நிர்வகிக்க புதிய குழு! அமைச்சரவை ஒப்புதல்!

உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள புனித யாத்திரைத் தலங்களை நிர்வகிக்க புதிய குழு அமைக்கப்படவுள்ளது.உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான அமைச்சரவையில் அம்மாநிலத்திலுள்ள சார் தாம் மற்றும் ஆதி கைலாஷ்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் காடுகளை சுற்றி வளைத்து பயங்கரவாத தேடுதல் வேட்டை

ஜம்மு-காஷ்மீரில் காடுகளைச் சுற்றி வளைத்து 3 பயங்கரவாத சந்தேக நபர்களைத் தேடும் பணி தொடங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிக்கு அருகே வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை இரவு மூன... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் சட்டவிரோதமாக வசித்த வங்கதேசத் தம்பதி கைது!

சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய வங்கதேசத் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். துர்க் மாவட்டத்தின் சிறப்பு அதிரடி படை காவல் துறையினர், அங்கு சட்டவிரோதமாக குடியேறி வசித்த... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியாணா மாணவர் கைது

இந்தியாவில் உளவு பார்த்து, மிகவும் முக்கியமான தகவல்களை பாகிஸ்தானுக்கு தெரிவித்ததாக, ஹரியாணாவைச் சேர்ந்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு வாரத்தில் நடந்திருக்கும் இரண்டாவது கைது சம்பவமாக இது உள்ளது. மேலும் பார்க்க