தில்லியில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேச பெண்கள் மூவா் கைது
ஓராண்டில் 3 கோப்பைகள்: ஊர்வலம் சென்ற பார்சிலோனா, 6 லட்சம் ரசிகர்கள் பங்கேற்பு!
லா லீகா கோப்பை வெற்றியைத் தொடர்ந்து பார்சிலோனா வீரர்கள் கொண்டாட்டம் கவனம் ஈர்த்து வருகிறது.
லா லீகா கோப்பை ஸ்பெயின் நடைபெறும் முக்கியமான கால்பந்து தொடராகும்.
இதில் 36-ஆவது போட்டியில் விளையாடிய பார்சிலோனா அணி எஸ்பானியோல் 2-0 என வென்றதன் மூலம் லா லீகா கோப்பையை உறுதி செய்தது.
இது பார்சிலோனாவுக்கு 28-ஆவது லா லீகா சாம்பியன் என்பது கவனிக்கத்தக்கது.
இந்த சீசனில் ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை, ஸ்பானிஷ் கோப்பை, லா லீகா என 3 கோப்பைகளையும் பார்சிலோனா அணி வென்றது.
The Power of Three pic.twitter.com/v0GTWJXN9G
— FC Barcelona (@FCBarcelona) May 17, 2025
லா லீகா தொடரில் வென்றதும் இந்தக் கோப்பைகளை தங்களது அணியின் பேருந்தில் வைத்துக்கொண்ட பார்சிலோனா அணியினர் ஸ்பெயினில் ஊர்வலமாகச் சென்றனர்.
பார்சிலோனா அணி வீரர்கள் மிகுந்த உற்சாகமாக இந்தக் கொண்டாட்டத்தைக் கொண்டாடினர்.
இந்தக் கூட்டதில் 6 லட்சத்து 70 ஆயிரம் ரசிகர்கள் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sun is shining and so are you pic.twitter.com/Ryv76KeXCQ
— FC Barcelona (@FCBarcelona) May 16, 2025
We dreamed it. We won it. We parade it. pic.twitter.com/5RZJ9U57No
— FC Barcelona (@FCBarcelona) May 16, 2025