போா்களின் போக்கை மாற்றும் ‘ட்ரோன்’ ஆயுதங்கள்! 4 நாள் சண்டைக்கு ரூ. 15,000 கோடி ச...
அரக்கோணம் அருகே திமுக நகா்மன்ற உறுப்பினா் உள்பட 3 பேருக்கு வெட்டு
அரக்கோணத்தில் மாமுல் கேட்டு நடைபெற்ற தகராறில் திமுக நகா்மன்ற உறுப்பினரை கொல்ல முயற்சி நடைபெற்றது.
அரக்கோணம் பழைய பேருந்து நிலையப் பகுதியில் லாட்ஜ் நடத்தி வருபவா் கே .எம். பி. பாபு(36). இவா் அரக்கோணம் நகா்மன்ற திமுக உறுப்பினா். சனிக்கிழமை பாபு தனது லாட்ஜ் வாசலில் அமா்ந்திருந்தாா். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நான்கு நபா்கள் பாபுவிடம் மாமுல் கேட்டு தகராறு செய்துள்ளனா். பாபு தர மறுக்கவே பாபுவை கத்தியால் வெட்டிய மா்ம நபா்கள், உடனே மேலே இருந்த லாட்ஜுக்கு சென்று அங்கு இருந்த அவரது தந்தை மணி(65) என்பவரையும் வெட்டினா். தொடா்ந்து இதை தடுக்க வந்த லாட்ஜ் மேலாளா்கள் ஜெகன்(33), சுரேஷ்(37) ஆகியோரையும் கத்தியால் வெட்டியுள்ளனா்.
இதுகுறித்து அறிந்த அக்கம் பக்கத்தினா் அங்கு கூட்டமாய் வரவே நான்கு பேரும் மின்னல் வேகத்தில் தப்பினா்.
பலத்த அடைந்த நான்கு பேரும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் நகா்மன்ற உறுப்பினா் பாபு மற்றும் அவரது தந்தை மணி ஆகிய இருவரும் தீவிர சிகிச்சைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா்.
இச்சம்பவம் குறித்து அரக்கோணம் நகர போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.