செய்திகள் :

முதல் 2 வாரங்களுக்கு மாணவர்கள் புத்தகங்கள் கொண்டுவரத் தேவையில்லை! - கேரள அரசு அறிவிப்பு

post image

கேரளத்தில் வருகிற ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும்போது மாணவர்கள் முதல் 2 வாரங்களுக்கு பாடப் புத்தகங்கள் கொண்டுவரத் தேவையில்லை என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

பள்ளி மாணவ, மாணவியருக்கு தேர்வுகள் முடிந்து தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஜூன் முதல் வாரம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

அந்தவகையில் கேரளத்தில் 2025-26 கல்வியாண்டுக்கு ஜூன் மாதம் பள்ளிகள் திறந்தபின், முதல் 2 வாரங்களுக்கு மாணவர்கள் பாடப் புத்தகங்கள் கொண்டுவரத் தேவையில்லை என்று கூறியுள்ளது.

அந்த 2 வாரங்களுக்கு மாணவர்களுக்கு சமூகப் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் அதுதொடர்பான பாடங்களை ஆசிரியர்கள் கற்பிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள், சுகாதார பிரச்னைகள், சமூக ஊடகங்களின் பயன்பாடு, சட்ட விதிகள், குற்றச் செயல்கள், சுற்றுச்சூழல் ஆகியவை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகள் எடுக்கப்பட உள்ளன.

இதற்காக காவல்துறை, குழந்தைகள் உரிமைகள் ஆணையம், தேசிய சுகாதார இயக்கம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பைச் சேர்ந்தவர்கள் கல்வித் துறைக்கு இதுதொடர்பான வழிமுறைகளை வழங்கியுள்ளதாக கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்தார்.

நாட்டிலேயே முதல்முறையாக மாணவர்களுக்கு பள்ளியிலேயே விழிப்புணர்வு ஏற்படுத்த கேரள அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | அமெரிக்கா மீது வரியைக் குறைத்த இந்தியா? டிரம்ப்பின் பேச்சால் மீண்டும் குழப்பம்!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியாணா மாணவர் கைது

இந்தியாவில் உளவு பார்த்து, மிகவும் முக்கியமான தகவல்களை பாகிஸ்தானுக்கு தெரிவித்ததாக, ஹரியாணாவைச் சேர்ந்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு வாரத்தில் நடந்திருக்கும் இரண்டாவது கைது சம்பவமாக இது உள்ளது. மேலும் பார்க்க

குற்றவாளிகளைப் பிடிக்க முயன்ற காவல் அதிகாரி மின்சாரம் பாய்ந்து பலி!

உத்தரப் பிரதேசத்தில் குற்றவாளிகளை விரட்டிச் சென்ற காவல் அதிகாரி ஒருவர் மின்சாரம் பாய்ந்து பலியாகியுள்ளார். பிஜ்னோர் மாவட்டத்தில் நாகினா சாலையில் நேற்று (மே 16) இரவு லார் ஓட்டுநர் ஒருவரை அடையாளம் தெரிய... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் குழு: காங்கிரஸ் பட்டியலில் சசி தரூர் பெயர் இல்லை! ஆனால்...!

ஆபரேஷன் சிந்தூர் குழு தொடர்பான காங்கிரஸ் கட்சியின் பரிந்துரை பட்டியலில் சசி தரூர் பெயர் இல்லாத நிலையில் மத்திய அரசு அவரை குழுவின் வழிகாட்டியாகத் தேர்வு செய்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கட... மேலும் பார்க்க

புணேவில் அதிரடி.. ஆற்றங்கரையோர ஆக்ரமிப்பு பங்களாக்கள் இடிப்பு!

புணே மாவட்டத்தின் பிம்ப்ரி சின்ச்வாடு புறநகர்ப் பகுதியில் உள்ள இந்திரயானி ஆற்றங்கரையோரம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட 36 பங்களாக்களை நகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை இடிக்கத் தொடங்கியுள்ளதாக அதிகாரி ஒருவர்... மேலும் பார்க்க

ஆப்கனுக்காக அட்டாரி - வாகா எல்லை திறப்பு!

ஆப்கானிஸ்தான் லாரிகளுக்காக அட்டாரி - வாகா எல்லை திறக்கப்பட்டது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள், ஏப்ரல் 22 ஆம் தேதியில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அட்டாரி... மேலும் பார்க்க

ஒடிசாவில் மின்னல் பாய்ந்து ஒரே நாளில் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி!

ஒடிசாவின் பல்வேறு மாவட்டங்களில் மின்னல் பாய்ந்து 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியாகியுள்ளனர். ஒடிசாவின் வடமேற்கு மாவட்டங்களில் நார்வெஸ்டர் என்றழைக்கப்படும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கோட... மேலும் பார்க்க