செய்திகள் :

சிரஞ்சீவியின் 157-ஆவது படத்தில் நயன்தாரா..! ரிலீஸ் தேதியும் அறிவிப்பு!

post image

நடிகர் சிரஞ்சீவியின் 157-ஆவது படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளதை படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் சிரஞ்சீவி தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சிரஞ்சீவிக்கு சமீபத்தில் பெரிதாக வெற்றிப் படங்கள் அமையவில்லை.

இவர் நடித்த வால்டர் வீரய்யா வசூலில் கலக்கியது. ஆனால், அதற்கடுத்து வெளியான போலோ ஷங்கர் திரைப்படம் தோல்விப்படமானது.

அடுத்ததாக, இவர் நடித்துவரும் விஸ்வாம்பரா திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. யுவி கிரியேஷன் தயாரித்துள்ள இந்தப் படத்தை வஷிஷ்டா இயக்கியுள்ளார்.

இந்நிலையில், சிரஞ்சீவி தனது 157-ஆவது படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தினை அனில் ரவிபுடி இயக்குகிறார்.

தெலுங்கில் வெளியான எஃப் 2, எஃப் 3, பகவந்த் கேசரி என்ற கமர்ஷியல் வெற்றிப் படங்களின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் அனில் ரவிபுடி.

சமீபத்தில் வெளியான இவரது சங்கராந்தி வஸ்துனாம் திரைப்படம் ரூ.230 கோடியை தாண்டி வசூலித்தது.

இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளதை படக்குழு விடியோவாக வெளியிட்டுள்ளது.

இந்தப் படம் அடுத்தாண்டு சங்கராத்திக்கு (பொங்கல் விழா) வெளியாகுமென நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

லைகாவை மிஞ்சிய முதலீடு... யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்?

தமிழ் சினிமாவில் பெரிய தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார் ஆகாஷ் பாஸ்கரன். சினிமாவில் தயாரிப்பாளராக முதலீடு செய்வது என்பது எப்போதும் லாபம் தரக்கூடியதாக அமைவதில்லை. ஒரு படம் கைகொடுத்தால் இன்னொரு படத்தில் இ... மேலும் பார்க்க

சூப்பா்பெட் கிளாசிக் செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா சாம்பியன்..!

ருமேனியாவில் நடைபெற்ற சூப்பா்பெட் கிளாசிக் செஸ் தொடரில் தமிழக செஸ் வீரர் ஆர். பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். ருமேனியாவில் நடைபெற்ற சூப்பா்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் 8-ஆவது சுற்றில் வெற்றி ... மேலும் பார்க்க

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2025: 12 ராசிகளுக்கும்!

2025-ஆம் ஆண்டுக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்துள்ளார்.வாக்கிய பஞ்சாங்கப்படி ஏப்ரல் 26-ம் தேதி ராகு-கேது பெயர்ச்சி நடந்து முட... மேலும் பார்க்க

சண்முக பாண்டியனுக்காக ரமணா 2 எடுக்க தயார்: ஏ.ஆர். முருகதாஸ்

படைத்தலைவன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சண்முக பாண்டியனுக்காக ரமணா 2 எடுக்க தயார் எனப் பேசினார். மறைந்த நடிகர் விஜய காந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் படைத் தலைவன் படத்தில் நடி... மேலும் பார்க்க

பாலிவுட் ஸ்டைலில் திரைப்படம் எடுக்க ஆசை: டாம் க்ரூஸ்!

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் பாலிவுட் திரைப்படங்களின் மீதான தனது விருப்பம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். டாம் க்ரூஸின் அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளுக்காகவே பிரபலமான அவரது ‘மிஷன்: இம்பாஸிபிள்’ ... மேலும் பார்க்க

15 ஆண்டுகளுக்குப் பிறகு ரேஸிங்..! 42 கிலோ எடையைக் குறைத்த அஜித்!

நடிகர் அஜித்குமார் 8 மாதங்களில் 42 கிலோ எடையைக் குறைத்தது குறித்து பேசியுள்ளார். நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. தற்போது பைக் ரேஸிங்க... மேலும் பார்க்க