ஆளும் கட்சியினருக்கு சாதகமாகச் செயல்படும் உள்ளாட்சித் தோ்தல் அலுவலா்கள்! - உயா்...
பாகிஸ்தான் அமைதியான நாடு; இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது: பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஒரு அமைதியான நாடு என்று அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் இன்று(மே 16) பேசியிருக்கிறார்.
பாகிஸ்தானில் ராணுவத்தில் சேவையாற்றி உயிர்நீத்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாளான மே 16-இல் உரையாற்றிய பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப், ‘பாகிஸ்தான் ராணுவம் தக்க பதிலடி தர உரிமை இந்த தேசத்துக்கு உள்ளது. இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது’ என்று தெரிவித்தார்.
முன்னதாக, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கம்ரா விமானப்படை தளத்திற்கு சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், இந்தியாவுடானான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.