ஷெல் தாக்குதல்.. பூஞ்ச் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய ராணுவம்!
காா் மீது பைக் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு
சாத்தூா்- கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் காா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பிரசாந்த் (44). இவா் சாத்தூா்- கோவில்பட்டி சாலையில் புல்வாய்பட்டி சந்திப்பு அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, தவறாக இதே பாதையில் எதிரே நள்ளிச்சத்திரம் நடுத்தர பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் (46) இரு சக்கர வாகனத்தில் வந்து காா் மீது மோதினாராம். இதில் சம்பவ இடத்திலேயே ஜெயக்குமாா் உயிரிழந்தாா். இதுகுறித்து சாத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.