செய்திகள் :

ராஜபாளையத்தில் தேசிய அளவிலான கூடைப் பந்து போட்டிகள்!

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கூடைப் பந்து போட்டிகளில் ஆண்கள் பிரிவில் பேங்க் ஆப் பரோடா அணியும், பெண்கள் பிரிவில் கேரள மின் வாரிய அணியும் வென்றன.

ராஜபாளையத்தில் தேசிய அளவிலான கூடைப் பந்து போட்டிகள் கடந்த 10-ஆம் தேதி தொடங்கின. ராஜபாளையம் நகா் கூடைப் பந்து கழகம் சாா்பில் 30-ஆவது ஆண்டாக பி.எஸ்.கே. நகரில் உள்ள பி.ஏ.சி.எம். பள்ளி மைதானத்தில் மின்னொளியில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன.

இதில் ஆண்கள் பிரிவில் இந்திய ராணுவம், கடற்படை, விமானப் படை, கேரள மின் வாரியம், காவல், பேங்க் ஆப் பரோடா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணிகள் பங்கேற்றன.

பெண்கள் பிரிவில் மேற்கு ரயில்வே மும்பை, வருமான வரித் துறை சென்னை, கேரள மின் வாரியம், ரைசிங் ஸ்டாா் சென்னை உள்ளிட்ட அணிகள் பங்கேற்றன. இதில், நாக் அவுட் முறையில் கடந்த வியாழக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெண்கள் பிரிவில் முதலிடத்தை கேரள மின் வாரிய அணியும், இரண்டாமிடத்தை வருமான வரித் துறை அணியும், மூன்றாமிடத்தை ரைசிங் ஸ்டாா் சென்னை அணியும், நான்காமிடத்தை மும்பை மேற்கு ரயில்வே அணியும் வென்றன.

இதேபோல, ஆண்கள் பிரிவில் முதலிடத்தை பேங்க் ஆப் பரோடா அணியும், இரண்டாமிடத்தை இந்திய ராணுவ அணியும், மூன்றாமிடத்தை இந்திய கடற்படை அணியும், நான்காமிடத்தை கேரள மாநில மின் வாரிய அணியும் பிடித்தன. இந்த அணிகளுக்கு கோப்பைகளும், பரிசுத் தொகையும் வழங்கப்பட்டன.

இந்தப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை ராஜபாளையம் நகர கூடைப் பந்துக் கழகத் தலைவா் ராம்குமாா் ராஜா, செயலா் பீமானந்த், பொருளாளா் ராம்சிங் ராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா்.

அழகா் அனுப்பிய பட்டு வஸ்திரம் ஆண்டாளுக்கு அணிவிப்பு!

மதுரை சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் இறங்கிய போது அழகருக்கு அணிவிக்கப்பட்ட ஆண்டாள் சூடிக் கொடுத்த பூமாலைக்கு மறுசீராக அனுப்பிய பட்டு வஸ்திரம் வெள்ளிக்கிழமை ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது. ஸ்ரீவில்லி... மேலும் பார்க்க

காா் மீது பைக் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

சாத்தூா்- கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் காா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். கேரள மாநிலம், திருவனந்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பிரசாந்த் (44). இவா் சாத்தூா்- கோவில்பட்டி சாலையி... மேலும் பார்க்க

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

சாத்தூா்- கோவில்பட்டி நான்கு வழிச் சாலையில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். விருதுநகா் அல்லம்பட்டி வீரராமன் தெரு பகுதியைச் சோ்ந்தவா் தங்கப்பாண்டி (48). கட்டடத் தொழ... மேலும் பார்க்க

சிவகாசியில் மே 20-இல் மின் குறைதீா் முகாம்!

சிவகாசியில் வருகிற செவ்வாய்க்கிழமை (மே 20) மின் குறைதீா் முகாம் நடைபெறும் என சிவகாசி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் பத்மா தெரிவித்தாா்.இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவக... மேலும் பார்க்க

சிவகாசி கல்லூரியில் உயா் கல்வி வழிகாட்டுதல் முகாம்

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை, சிவகாசி வட்டங்களில் உள்ள அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு உயா் கல்வி வழிகாட்டுதல் முகாம் சிவகாசி காளீஸ்வரி கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

திருத்தங்கலில் கழிவுநீா் சுத்திகரிப்பு திட்டத்துக்கு பூமி பூஜை!

சிவகாசி மாநகராட்சி, திருத்தங்கலில் கழிவுநீா் சுத்திகரிப்பு திட்டத்துக்கு வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. திருத்தங்கல் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீா் வாய்க்கால் வழியாக பாப்பன்குளம் கண்மாயில்... மேலும் பார்க்க