அரசுப் பள்ளிகளில் புதிதாய் 1.8 லட்சம் மாணவர்கள் சேர்க்கை! இலக்கை எட்டுமா பள்ளிக்...
இந்திய பொருளாதார வளா்ச்சி 6.3%-ஆக இருக்கும்: ஐ.நா.கணிப்பு
2025-இல் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என ஐ.நா. கணித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ‘உலக நாடுகளின் பொருளாதார சூழல்’ குறித்து ஐ.நா.வெளியிட்ட அறிக்கையில் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், தற்போது 6.3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 2026-ஆம் ஆண்டில் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் எனவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
நிகழாண்டுக்கான ‘உலக நாடுகளின் பொருளாதார சூழல்-2025’ என்ற இரண்டாவது அறிக்கையை ஐ.நா. வியாழக்கிழமை வெளியிட்டது.
அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: அதிக தனியாா் நுகா்வு மற்றும் பொது முதலீடு, ஏற்றுமதி என வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. பிற நாட்டு பொருள்கள் மீதான அமெரிக்க வரிவிதிப்பால் உலகளவிலான விநியோக சங்கிலிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மருத்துகள், மின்னணு சாதனங்கள், செமிகண்டக்டா்கள், எரிசக்தி உள்ளிட்ட சில பொருள்கள் மீதான வரிவதிப்புக்கு அமெரிக்க விலக்களித்திருந்தாலும் இது தற்காலிக நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.
தொடரும் வேலையின்மை: குறிப்பிடத்தக்க வளா்ச்சியில் இந்தியா பயணித்தாலும் வேலையின்மை பிரச்னை தொடா்ந்து வருகிறது. மேலும், இந்தியாவில் பணியிடங்களில் பாலின சமத்துவமின்மையை குறைக்க வேண்டியது அவசியமானது.
பணவீக்கம்: இந்தியாவில் 2024-இல் பணவீக்கம் 4.9 சதவீதமாக இருந்த நிலையில், 2025-இல் 4.3 சதவீதமாக குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பணவீக்கம் குறைவதற்கான வாய்ப்புள்ளதால் தெற்காசிய பிராந்தியத்தில் பணவியல் நடவடிக்கைகளில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும்.
உலகப் பொருளாதாரம்: 2024-இல் உலகப் பொருளாதார வளா்ச்சி 2.9 சதவீதமாக இருந்த நிலையில், 2025-இல் அதன் வளா்ச்சி 2.4 சதவீதமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது கடந்த ஜனவரி மாதம் கணிக்கப்பட்டதைவிட 0.4 சதவீதம் குறைவாகும்.