Ace: "ஒரு நடிகரா அவரைப் பற்றி நிறையக் கேள்விப்பட்ருக்கிறேன்" - விஜய் சேதுபதி குற...
"சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்கள் முதலில் மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டும்"- ராஜேஷ் கண்ணன் IPS
'UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து நாமக்கலில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.
'UPSC/TNPSC குரூப் -1, 2 - தேர்வுகளில் வெல்வது எப்படி?' என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற மே 24 ஆம் தேதி நாமக்கல்லில் உள்ள பாவை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடக்க இருக்கிறது. அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது.

இந்த நிகழ்வில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் Dr. உமா, நாமக்கல் மாவட்ட எஸ்.பி IAS, திரு. ராஜேஷ் கண்ணன் IPS, திரு. CA.N.V நடராஜன் (நிறுவனர் மற்றும் தலைவர் பாவை கல்வி நிறுவனங்கள்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு போட்டித் தேர்வுகள் குறித்த ஆலோசனைகளை வழங்க உள்ளார்கள்.
இவர்களுடன் King Makers IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதனும் ஊக்க உரை ஆற்றுகிறார்.
இந்நிலையில் திரு. ராஜேஷ் கண்ணன் IPS-யிடம் தொடர்புகொண்டு பேசினோம். " 2008-ல் எனது பள்ளிப் படிப்பை முடித்தேன். அரசுப் பள்ளியில் தமிழ் மீடியத்தில்தான் நான் படித்தேன். அதன் பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினீயரிங் படித்து முடித்தேன்.
2014-ல் UPSC தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றேன். 2015-ல் வேலை கிடைத்துவிட்டது. UPSC தேர்வு மற்ற தேர்வுகளைக் காட்டிலும் சற்று வித்தியாசமானது. தமிழ் மீடியம் படித்த மாணவர்களுக்கு முதலில் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும்.

ஆனால் முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். UPSC தேர்வைப் பொறுத்தவரை 50 சதவிகிதம் உங்கள் நாலேஜ்ஜை செக் செய்து பார்ப்பார்கள். மீதம் இருக்கக்கூடிய அந்த 50 சதவிகிதத்தில் உங்களின் தனிப்பட்ட சிந்தனையைத்தான் பார்ப்பார்கள்.
ஒரு சமூகத்தில் உள்ள அடித்தட்டு மக்களின் பிரச்னைகள் அதைப் பற்றி சிந்தித்து அதற்கு தீர்வு காண்கிற ஒரு நபர் தான் அரசாங்கத்திற்கு வேண்டும். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்கள் மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டும்" என்றார்.
இந்தப் பயிற்சி முகாமிற்கு முன்பதிவு செய்ய 044- 66802997 என்ற எண்ணிற்கு மிஸ்ட்கால் கொடுக்கவும். அப்படி இல்லையென்றால் இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் கீழ்க்கண்ட விண்ணப்பத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.