UPSC: வெளியான தேர்வு முடிவுகள்; இந்திய அளவியல் முதலிடம் பிடித்த சக்தி துபே - யார் இவர்?
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது. 1009 பேர் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இதில் 335 பேர் பொதுப் பிரிவினர். 109 பேர் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினர் ஆவர்.
யுபிஎஸ்சி அறிவிக்கையின்படி, இந்தத் தேர்வு மூலம் 1,129 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் இந்திய நிர்வாக சேவையில் (ஐஏஎஸ்) 180 பதவிகளும், இந்திய வெளியுறவு சேவையில் (IFS) 55 பதவிகளும், இந்திய காவல் சேவையில் (ஐபிஎஸ்) 147 பதவிகளும் அடங்கும்.

சக்தி துபே
இன்று முடிவுகள் வெளியான நிலையில். இந்தத் தேர்வில் இந்திய அளவில் சக்தி துபே என்பவர் முதலிடம் பிடித்திருக்கிறார். சக்தி துபே உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் (பிஹெச்யூ) உயிர் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். 2018 ஆம் ஆண்டு முதல் யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகி வந்திருக்கிறார்.
அதேபோல இந்தத் தேர்வில் ஹர்ஷிதா கோயல் இரண்டாவது இடத்தையும், டோங்ரே அர்ச்சித் பராக் மூன்றாவது இடத்தையும் பிடித்திருக்கின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவச்சந்திரன் அகில இந்திய அளவில் 23ஆம் இடத்தைப் பிடித்திருக்கிறார்.

இவர் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்றவர் ஆவார். அதேபோல நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்ற மோனிகா 39ஆவது இடத்தைப் பெற்றிருக்கிறார். விண்ணப்பத்தாரர்கள் upsc.gov.in என்ற இணையத்தளத்தில் தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம்.