Dhoni: 'என்னால் சகித்துக்கொள்ள முடியாத வதந்தி அதுதான்...'- தோனி ஓப்பன் டாக்
ஐ.பி.எல் போட்டிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் சீசனுக்கு இடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் தோனி கலந்துகொண்டிருக்கிறார்.
அதில், தோனி பற்றி முன்பு பரவலாகப் பேசப்பட்ட ஒரு விஷயத்தைப் பற்றி அவரே தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

தோனி சர்வதேசப் போட்டிகளில் விளையாடி ஐந்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இன்றும் அவர் மீதான க்ரேஸ் குறையவில்லை. தோனி கிரிக்கெட்டிற்கு அறிமுகமான புதிதில் அவரைப் பற்றிய சுவராஸ்யமான தகவல்கள் என்ற பெயரில் நிறைய தகவல்கள் வெளியாகும்.
இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில், தோனியிடம் உங்களைப் பற்றி வெளியான வதந்திகளில் சகித்துக்கொள்ள முடியாத வதந்தி என்றால் எது? என்று தொகுப்பாளர் கேட்டிருக்கிறார். அதற்கு பதிலளித்த தோனி, "ஒரு நாளைக்கு நான் 5 லிட்டர் பால் குடிப்பேன் என்று வதந்திகள் பரவின. அது எப்படி சாத்தியம்.

ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் பால் வேண்டுமானால் குடிப்பேன், அவ்வளவுதான்" என ஜாலியாக சிரித்துக் கொண்டே கூறினார். உடனே, 'பால் மாதிரியே நீங்கள் லெஸ்ஸியும் அதிகமாக குடிப்பீர்களாமே...?' என்று கேட்க, 'எனக்கு லெஸ்ஸி பிடிக்கவே பிடிக்காது.' என தோனி கூறியிருக்கிறார்.
தோனியை பற்றி நீங்கள் கேள்விப்பட்ட வதந்திகளை கமெண்ட்டில் தெரியப்படுத்துங்கள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...