டாடா கம்யூனிகேஷன்ஸ் 4வது காலாண்டு நிகர லாபம் 4 மடங்கு அதிகரிப்பு!
டாடா கம்யூனிகேஷன்ஸ் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் அதன் நிகர லாபம் ரூ.1,040 கோடியாக அதிகரித்துள்ளது.
இது அதன் முந்தைய மூன்று மாதங்களை விட 4.4 மடங்கு அதிகரித்துள்ளது. அதே வேளையில் அதன் வருவாய் 3.3 சதவிகிதம் உயர்ந்து ரூ.5,990 கோடியாக உள்ளது.
நிறுவனத்தின் வருமானம் சந்தை ஆய்வாளர்களின் எதிர்பார்ப்புகளை மீறி உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
2024 நிதியாண்டின் இறுதி காலாண்டில் நிறுவனமானது ரூ.315 கோடி நிகர லாபத்தையும் ரூ.5,974 கோடி வருவாயையும் பதிவு செய்துள்ளது.
லாபத்தின் முக்கிய அளவீடான நிறுவனத்தின் லாப வரம்பு, அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலகட்டத்தில் இது 20.37 சதவிகிதத்திலிருந்து 18.73 சதவிகிதமாக உள்ளது.
நிறுவனமானது 2024-25 நிதியாண்டிற்கான இறுதி ஈவுத்தொகையாக ஒரு பங்குக்கு ரூ. 25 அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: நாட்டின் 3வது பெரிய நிறுவனமாக மாறிய ஹெச்டிஎஃப்சி வங்கி!