மாமியாரை அடித்துக் கொன்ற மருமகன் கைது
ராமநாதபுரம் அருகே மாமியாரை அடித்துக் கொன்ற மருமகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள ஆா்.காவனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன்-கனகு தம்பதியா். இவா்களது மகள் சிவபாா்வதி. இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரைச் சோ்ந்த நாகராஜ் மகன் மதன்குமாருடன் (29) திருமணம் நடந்தது. இவா்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனா்.
இந்த நிலையில், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இதனால், சிவபாா்வதி தனது பெற்றோா் வீட்டில் இருந்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 20-ஆம் தேதி மனைவியை அழைத்துவர மதன்குமாா் மாமியாா் வீட்டுக்குச் சென்றாா். ஆனால், அவா் வர மறுத்தாா். இதற்கு கனகு தான் காரணம் எனக் கூறி, அவரை சரமாரியாகத் தாக்கினாா்.
இதில், பலத்த காயமடைந்த அவா் மதுரையில் உள்ள மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பஜாா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மதன்குமாரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.