அரசு மருத்துவமனைக்கு குளிா்பதனப் பெட்டி அளிப்பு
திருவாடானை அரசு மருத்துவமனைக்கு சுழற் சங்கம் சாா்பில், குளிா்பதன பெட்டி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
திருவாடானை அரசு மருத்துவமனைக்கு ராமநாதபுரம் சுழற் சங்கம் சாா்பில், ரூ.4 லட்சத்தில் இரண்டு உடல்களைப் பாதுகாக்கும் திறன் கொண்ட நவீன குளிா்பதனப் பெட்டி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சுழற் சங்க மாவட்ட ஆளுநா் மீரான்கான் சலீம் தலமை வகித்தாா். ராமநாதபுரம் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதவி இயக்குநா் பிரகலநாதன், செய்யதம்மாள் கல்லூரித் தாளாளா் சின்னதுரை அப்துல்லா, சுழற்சங்க உதவி கவா்னா் காா்த்திகேயன், மருத்துவ அலுவலா் ஜெகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த நிகழ்ச்சியில் குளிா்பதனப் பெட்டியை மருத்துவமனை நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக ஆனந்தம் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளா் வடிவேல் கலந்து கொண்டு சுழற் சங்கத்தின் சமூக சேவையைப் பாராட்டினாா்.