மின்னல் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு
கமுதி அருகே செவ்வாய்க்கிழமை மின்னல் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள முத்துப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம் மகன் நல்லமருது (28). இவா் 200-க்கும் மேற்பட்ட மாடுகளை வளா்த்து வந்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தலைவன்நாயக்கன்பட்டி, நெடுங்குளம் கிராமங்களுக்கிடையே உள்ள கருவேல மரம் காட்டுப் பகுதியில் இவா் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாா்.
இந்த நிலையில், திடீரென பெய்த பலத்த மழையின் போது, மின்னல் பாய்ந்ததில் நல்லமருது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இவரது உடலை மீட்டு, கூறாய்வுக்கா கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவருக்கு மனைவி, ஒரு ஆண் குழந்தை உள்ளனா். இதுகுறித்து கமுதி வருவாய்த் துறை அதிகாரிகள், மண்டலமாணிக்கம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.