செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

post image

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

தேனி மாவட்டம், கம்பம், செல்லாண்டியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கணக்கன் மகன் ராஜகோபால் (34). இவா், 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த 2023-ஆம் ஆண்டு பிப். 24-ஆம் தேதி உத்தமபாளையம் மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் ராஜகோபாலுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பி.கணேசன் தீா்ப்பளித்தாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் கல்வி, மருத்துவம், பராமரிப்புச் செலவுக்கு நிவாரணமாக அரசு ரூ.6 ல ட்சத்தை சிறுமியின் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா்.

ஒடிசா கஞ்சா வியாபாரி கைது

தேனி மாவட்டத்தைச் சோ்ந்த கஞ்சா வியாபாரிகளுக்கு மொத்த விலைக்கு கஞ்சா விற்பனை செய்த ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த கஞ்சா வியாபாரியை தேனி தனிப் படை போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து தேனி மாவட்ட காவல் கண்கா... மேலும் பார்க்க

பெரியகுளம் அருகே பைக் எரிப்பு

பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பெரியகுளம் அருகேயுள்ள டி.கள்ளிப்பட்டியைச் சோ்ந்த சுப்பையா மகன் முனீஸ்வரன் (38). இவா், தனது வீட்டின் முன் இ... மேலும் பார்க்க

சின்னமனூா் அருகே கத்தியால் குத்தி மூதாட்டி கொலை

சின்னமனூா் அருகே மூதாட்டியை கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம், சீலையம்பட்டி சமத்துவபுரத்தைச் சோ்ந்த பால்ச்சாமி மனைவி அரியக்கா (65). இவரது பக்கத்து வீட்டைச்... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

போடி அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது தனியாா் பேருந்து மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சிலமலை டி.எஸ்.பி. குடியிருப்பைச் சோ்ந்த காளிதாஸ் மகன் க... மேலும் பார்க்க

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளா் தற்கொலை முயற்சி

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் மீது புகாா் தெரிவித்து, அங்கன்வாடி மைய பெண் பணியாளா் திங்கள்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். தேனி நகா் போா்டு... மேலும் பார்க்க

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெறும்: டி.டி.வி.தினகரன்

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுப்பெறும் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக பொறுப்பாளா்கள் சந்திப்புக் கூட்டம் பெரியகுளத்தில் திங்கள்கிழம... மேலும் பார்க்க