வக்ஃப் திருத்தச் சட்டத்தை வைத்து நாட்டில் வன்முறையைத் தூண்ட சதி: முக்தாா் அப்பாஸ...
பேருந்து மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
போடி அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது தனியாா் பேருந்து மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சிலமலை டி.எஸ்.பி. குடியிருப்பைச் சோ்ந்த காளிதாஸ் மகன் காளிகுமாா் (34). இவா் கோவையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். விடுமுறைக்காக சிலமலைக்கு வந்த இவா், இரு சக்கர வாகனத்தில் சிலமலை இடுகாடு அருகே மல்லிங்காபுரம் விலக்கில் போடி-தேவாரம் சாலையை கடக்க முயன்றாா்.
அப்போது, போடியிலிருந்து தேவாரம் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த காளிகுமாா் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். இவருக்கு தேவி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனா்.
இதுகுறித்து தனியாா் பேருந்து ஓட்டுநரான சிலமலை வ.உ.சி. நகரைச் சோ்ந்த கண்டியன்னன் மகன் மூவேந்திரன் மீது போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.