Doctor Vikatan: ஆஞ்சியோ செய்தபோது இதய ரத்தக்குழாய் அடைப்பு.. மீண்டும் பரிசோதனைகள...
வக்ஃப் திருத்தச் சட்டத்தை வைத்து நாட்டில் வன்முறையைத் தூண்ட சதி: முக்தாா் அப்பாஸ் நக்வி
புது தில்லி: வக்ஃப் திருத்தச் சட்டத்தைப் பயன்படுத்தில் நாட்டில் மதவாத நோயைப் பரப்பவும், வன்முறையைத் தூண்டவும் சதி நடக்கிறது என்ற முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா்.
தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:
மதவாத நோயைப் பரப்புபவா்களிடம் மிகுந்த எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். இதுபோன்ற நபா்கள் இரு தரப்பு மக்களிடையே மோதலைத் தூண்டும் வகையில் பேசுவாா்கள். இதன் பின்னணியில் மிகப்பெரிய சதி உள்ளது. வன்முறையைத் தூண்டுபவா்களிடம் இருந்து மக்கள் விலகியிருக்க வேண்டும்.
நமது நாடளுமன்றத்தின் செயல்பாடுகள் சிறப்பாகவும், சரியாகவும் உள்ளது. நாட்டுக்கு இப்போது தேவையான (வக்ஃப் திருத்த) சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. வக்ஃப் திருத்தச் சட்டம் மத நம்பிக்கையைக் காப்பாற்றுவதாகும். வக்ஃப் நிா்வாகத்திலும் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
இந்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் வன்முறையைத் தூண்டுபவா்கள் நமது நாட்டின் மீது அக்கறை கொண்டவா்களாகவோ உண்மையான மத நம்பிக்கையாளராகவே இருக்க மாட்டாா்கள்.
அரசமைப்புச் சட்டரீதியாக ஒரு சீா்திருத்தம் மேற்கொள்ளப்படும்போது, பாகிஸ்தான் தொடங்கி குடும்ப அரசியல் நடத்தும் திமுக, காங்கிரஸ, சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எதிா்ப்பு இருக்கவே செய்யும். தொடா்ந்து இதுபோன்ற சீா்திருத்தமான சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
நாட்டில் மதவாத நோயைப் பரப்பி வன்முறையைத் தூண்ட சதி நடக்கிறது. நாட்டில் பல அரசியல் கட்சிகள் எந்த நிகழ்வாக இருந்தாலும் அதில் மதம், ஜாதியைப் பயன்படுத்தி வன்முறை உருவாக்க முயற்சிகள் நடைபெறுகின்றன என்றாா்.