Gujarat Titans : ஃபெயிலே ஆகாத டாப் ஆர்டர்; முதுகெலும்பாக தமிழக வீரர்கள்!'- குஜரா...
போப் பிரான்சிஸ் மறைவு: 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் -மத்திய அரசு
புது தில்லி: போப் பிரான்சிஸ் மறைவையொட்டி நாடெங்கிலும் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை மறைந்தாா். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவா்கள், தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, இன்றும் நாளையும் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும். அதனைத்தொடர்ந்து, போப் உடல் நல்லடக்கம் செய்யப்படும் நாளிலும் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட 3 நாள்களும் அனைத்து பகுதிகளிலும் அலுவலகங்களிலும் நிறுவனங்களிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.