செய்திகள் :

பங்குச்சந்தை நிலவரம்: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு!

post image

மும்பை: பங்குச்சந்தையில் மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் செவ்வாய்க்கிழமை(ஏப். 22) உயர்ந்து வர்த்தகமாகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 319.89 புள்ளிகள் உயர்ந்து 79,728.39 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 76.1 புள்ளிகள் உயர்ந்து 24,201.65 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

முன்னதாக, திங்கள்கிழமை(ஏப். 21) பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் நல்ல லாபத்துடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஜென்சோல் இன்ஜினியரிங் பங்குகள் 5% சரிவு!

புதுதில்லி: ஜென்சோல் இன்ஜினியரிங் பங்குகள், 5 சதவிகிதம் சரிந்து, அதன் லோயர் சர்க்யூட் லிமிட்டை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.மும்பை பங்குச் சந்தையில் இந்த பங்கின் விலை 4.98 சதவிகிதம் சரிந்து ரூ.111.6... மேலும் பார்க்க

பேங்க் ஆஃப் பரோடாவில் தனது மூலதனத்தை 2% அதிகரித்த எல்ஐசி!

புதுதில்லி: காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவில், அதன் பங்குகளை, 2 சதவிகிதம் அதிகரித்து, 7.05 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஒன்றரை வருட காலத... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.85.13-ஆக முடிவு!

மும்பை: டாலர் குறியீட்டில் ஏற்பட்ட வீழ்ச்சியாலும், அதனை தொடர்ந்து உள்நாட்டில் பங்குகளின் தொடர் எழுச்சியால் இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 பைசா உயர்ந்து ரூ.85.13 ஆக ... மேலும் பார்க்க

அதிக பேட்டரி திறன் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்!

ஓப்போ நிறுவனத்தில் அதிக பேட்டரி திறன் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் இன்று (ஏப். 21) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஓப்போ நிறுவனத்தில், கே 13 5ஜி என்ற புதிய ஸ்மார்ட்போன... மேலும் பார்க்க

தொடர்ந்து 5வது நாளாக உயர்ந்து முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை: தனியார் துறை வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கியின் வலுவான 4-வது ஆண்டு வருவாயால் உந்தப்பட்டு, பெஞ்ச்மார்க் குறியீடுகள் இன்று தொடர்ந்து ஐந்தாவது அமர்வாக தங்கள் வெற்றிப் பாதையை ந... மேலும் பார்க்க

ரெட்மியின் புதிய ஸ்மார்ட் வாட்ச்! சிறப்புகள் என்னென்ன?

ஸியோமி நிறுவனத்தின் ரெட்மி ஸ்மார்ட் வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் வேகமான வாழ்க்கை முறையைக் கொண்ட பயனர்களைக் குறிவைத்து இந்த ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத... மேலும் பார்க்க