CSK: '2010 ஆம் ஆண்டிலும் இப்படித்தான் ஆடியிருந்தோம். ஆனால்..!' - தொடர் தோல்வி கு...
கோவை: கழிப்பறைக்கு கக்கன், அண்ணா பெயர்கள்! சர்ச்சைக்கு பிறகு அழிப்பு!
கோவை: கோவை மாநகராட்சி கழிப்பறைக்கு தமிழக அரசியல் மூத்த தலைவர்கள் கக்கன் மற்றும் அண்ணாதுரை பெயர்கள் வைக்கப்பட்டதற்கு கண்டனம் எழுந்த நிலையில், இரவோடு இரவாக பெயர்கள் அழிக்கப்பட்டன.
கோவை 95வது வார்டு குறிச்சி, அண்ணா நகரில் சில்வர் ஜூபிலி என்ற பகுதியில் மாநகராட்சி சார்பில் பொதுக் கழிப்பிடம் ஒன்று உள்ளது. சமீபத்தில் இந்தக் கழிப்பிடத்துக்குப் பெயிண்ட் அடிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டது.
புதுப் பொலிவுடன் காட்சியளிக்கும் இந்தக் கழிப்பிடத்தின் முன்பக்க சுவரில், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான அண்ணாதுரையின் பெயரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கக்கன் பெயரும் வைக்கப்பட்டது சர்ச்சை ஆனது. இதற்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தலைவர்களின் பெயர்களை இரவோடு இரவாக பெயிண்ட் அடித்து மாநகராட்சி நிர்வாகம் அழித்துள்ளது.