செய்திகள் :

4 ஆண்டுகளில் 70% மின் கட்டணம் உயர்வு: இபிஎஸ்

post image

கடந்த 4 ஆண்டுகளில் 70 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறுவனங்களில் நடத்திய சோதனை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு கேட்டார்.

இதற்கு பேரவைத் தலைவர் அப்பாவு அனுமதி மறுத்ததைக் கண்டித்து, அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து சட்டப் பேரவை வளாகத்தில் எடப்பாடி கே பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

"டாஸ்மாக் நிறுவனம் மற்றும் மது ஆலைகளுக்கு சொந்தமான நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்று இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது

இது தொடர்பாக விவாதிக்க வாய்ப்பு கேட்டோம். மதுவிலக்கு துறை மானிய கோரிக்கை விவாதத்தில் இது குறித்து பேசினால்தான் உரிய பதில் கிடைக்கும் என்று, இன்று பேரவையில் பேச முயன்றோம், ஆனால் இந்தப் பிரச்னை குறித்து பேசுவதற்கு பேரவைத் தலைவர் முழுமையாக அனுமதியை வழங்க மறுத்து விட்டார்.

கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் அண்மைக்காலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டு பிரச்னையால், தமிழ்நாடு குடிநீர் வாரிய மின் மோட்டார்கள் முறையாக செயல்படாததால், சென்னை மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகிக்க சிரமமாக இருப்பதால் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் கிடைக்காததால் விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவிக்கின்றனர், இதனால் விவசாய தொழிலாளர்களுக்கும் முறையாக வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

திமுக ஆட்சிக்கு வந்த கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவரை 70 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதால், பல்வேறு தொழில் நிறுவனங்கள் பக்கத்து மாநிலங்களுக்கு சென்று தொழில் தொடங்க சென்று விட்டனர்

திமுக ஆட்சிக்கு வந்தால் மாதம் ஒருமுறை மின்கட்டணம் கணக்கெடுக்கும் பணி நடத்தப்படும் என்ற வாக்குறுதி அளித்து, நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரை நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறது” என்றார்.

இதையும் படிக்க: சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து!

இரண்டு மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்!

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட மசோதா மற்றும் தமிழ்நாடு பொது கட்டட உரிம த... மேலும் பார்க்க

குரூப் 1 தேர்வு: இறுதி தரவரிசைப் பட்டியல் வெளியானது!

குரூப் 1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் வெளியிட்டுள்ளது.துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கியப் பணியிடங்கள் குரூப் 1 பிரிவின் கீழ் வருகின்றன. அந்த வகையில்,... மேலும் பார்க்க

போப் இறுதிச் சடங்கு: அமைச்சர் நாசர், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் பங்கேற்பு!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் நாசர், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்துகொள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில்!

கோடை விடுமுறையையொட்டி தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.வருகின்ற ஏப்ரல் 29 முதல் ஜூன் 29 ஆம் தேதி வரை வாரத்தில் 5 நாள்கள் இயக்கப்ப... மேலும் பார்க்க

மொழிப்போர் தியாகி ராஜேந்திரனுக்கு மணிமண்டபம்: பத்திரப் பதிவு செய்த சீமான்!

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் தியாகி மாணவர் ராஜேந்திரனுக்கு மணிமண்டபம் அமைப்பதற்காக நிலம் வாங்கிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திங்கள்கிழமை பத்திரப் பதிவு செய்தா... மேலும் பார்க்க

துணை வேந்தர்கள் மாநாட்டில் ஜகதீப் தன்கர் பங்கேற்பு!

உதகையில் நடைபெறும் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்கவிருப்பதாக தமிழக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.தமிழக ஆளுநராக ஆா்.என்.ரவி 2021-ஆம் ஆண்டு செப்டம்... மேலும் பார்க்க