செய்திகள் :

மொழிப்போர் தியாகி ராஜேந்திரனுக்கு மணிமண்டபம்: பத்திரப் பதிவு செய்த சீமான்!

post image

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் தியாகி மாணவர் ராஜேந்திரனுக்கு மணிமண்டபம் அமைப்பதற்காக நிலம் வாங்கிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திங்கள்கிழமை பத்திரப் பதிவு செய்தார்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே ரெங்கப்பிள்ளை மண்டபம் பகுதியில் 1965 ஆம் ஆண்டு ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது உயிர்நீத்த அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் தியாகி ராஜேந்திரன் சமாதி அமைந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் கல்லல் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ராஜேந்திரன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. இளநிலை பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில், அப்பொழுது மத்திய அரசு கொண்டு வந்த ஹிந்தி திணிப்பு சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்ததால் உயிரிழந்த ராஜேந்திரன் உடல் சொந்த ஊர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து பரங்கிப்பேட்டை ரங்கப்பிள்ளை மண்டபம் பகுதியில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பரங்கிப்பேட்டையில் அமைந்துள்ள ராஜேந்திரனின் சமாதிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திங்கள்கிழமை அன்று மாலை அணிவித்து மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து ராஜேந்திரன் சமாதி அமைந்துள்ள இடத்தை சுற்றி தனியார் வசம் இருந்த 4 சென்ட் நிலத்தை தியாகி ராஜேந்திரனுக்கு மணிமண்டபம் அமைப்பதற்காக சீமான் தனது பெயரில் வாங்கி பத்திரப்பதிவு செய்தார்.

இதற்காக பரங்கிப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகம் சென்ற சீமான் அலுவலகத்தில் காத்திருந்து அனைத்து கோப்புகளிலும் கையெழுத்திட்டு இடத்தைப் பதிவு செய்துவிட்டு சென்றார்.

தியாகி ராஜேந்திரனின் நினைவிடம் புதுப்பிக்கப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் அதனை சுற்றியுள்ள இடத்தை சொந்தமாக வாங்கியிருக்கும் சீமான் மணி மண்டபம் அமைக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தொழிலதிபர், மனைவி கொடூரக் கொலை! ஆயுதங்களை விட்டுச் சென்ற கொலையாளிகள்!

கோடை விடுமுறை: தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில்!

கோடை விடுமுறையையொட்டி தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.வருகின்ற ஏப்ரல் 29 முதல் ஜூன் 29 ஆம் தேதி வரை வாரத்தில் 5 நாள்கள் இயக்கப்ப... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் 70% மின் கட்டணம் உயர்வு: இபிஎஸ்

கடந்த 4 ஆண்டுகளில் 70 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை மானிய கோரிக்கை ... மேலும் பார்க்க

துணை வேந்தர்கள் மாநாட்டில் ஜகதீப் தன்கர் பங்கேற்பு!

உதகையில் நடைபெறும் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்கவிருப்பதாக தமிழக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.தமிழக ஆளுநராக ஆா்.என்.ரவி 2021-ஆம் ஆண்டு செப்டம்... மேலும் பார்க்க

பேரவையில் கடும் அமளி! அதிமுக வெளிநடப்பு!

டாஸ்மாக் நிறுவன முறைகேடு குறித்து சட்டப்பேரவையில் பேச அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.சட்டப்பேரவை இன்று(ஏப். 22) 9.30 மணிக்கு கூடியவுடன் கத... மேலும் பார்க்க

காட்டு யானை தாக்கி தபால் பட்டுவாடா செய்யும் பெண் பலி!

கூடலூர்: காட்டு யானை தாக்கியதில் தபால் பட்டுவாடா செய்யும் பெண் பலியான சம்பவம் பரபரப்பை எழுப்பியுள்ளது.கூடலூரை அடுத்த மசினகுடி பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சரஸ்வதி (வயது 55). இவர் மசினகுடி ... மேலும் பார்க்க

போப் மறைவு: தமிழக தலைமைச் செயலகத்தில் அரைக்கம்பத்தில் பறக்கும் தேசியக் கொடி!

போப் பிரான்ஸிஸ் மறைவையொட்டி துக்கம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் ந... மேலும் பார்க்க