தங்கம் விலை முதல்முறையாக ரூ.1 லட்சத்தை தொட்டது!
மும்பை: 10 கிராம் தங்கத்தின் விலை சில்லறை சந்தையில் முதல்முறையாக ரூ. 1 லட்சத்தைக் கடந்து விற்பனையாகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கை மற்றும் பொருளாதார கொள்கை மாற்றங்களால் சர்வதேச சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. இந்த நிலையில், இதன் தாக்கம் தங்கத்தின் விலையில் எதிரொலித்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் முதல்முறையாக தங்கத்தின் விலை ரூ. 1 லட்சம் என்ற அளவை தாண்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை(ஏப். 22) காலை நிலவரப்படி, 10 கிராம் தங்கம் சில்லறை சந்தைகளில் ரூ.1,02,794-க்கு விற்பனையாகிறது.
24 கேரட் எனப்படும் 99.99% பரிசுத்தமான தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.99,800-க்கும், (22 கேரட்)99.5% பரிசுத்த தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.99,300-க்கும் விற்பனையாகிறது என்று இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கான ‘அனைத்து இந்திய சர்ஃப்ரா சங்கம்’ தெரிவித்துள்ளது.
இதனுடன், தங்கத்துக்கான 3% ஜிஎஸ்டி-யையும் சேர்த்தால் 10 கிராம் 99.99% பரிசுத்த தங்கத்தின் மொத்த விலை ரூ.1,02,794-க்கு விற்பனையாகிறது. 99.5% பரிசுத்த தங்கத்தின் மொத்த விலை 10 கிராம் ரூ.1,02,279-க்கு விற்பனையாகிறது.
இந்த ஓராண்டில் மட்டும் தங்கத்தின் விலை 26.41% உயர்ந்திருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், விலை மேலும் அதிகரிக்கும்!