Gujarat Titans : ஃபெயிலே ஆகாத டாப் ஆர்டர்; முதுகெலும்பாக தமிழக வீரர்கள்!'- குஜரா...
நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!
நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சாய் சூர்யா, சொர்ணா குரூப்ஸ் ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இவ்விரு நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரே நிலத்தைப் பல பேரிடம் விற்றிருப்பது கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், மேற்கண்ட நிறுவனங்களின் விளம்பர தூதராக மகேஷ் பாபு உள்ளதால் இந்த முறைகேடு வழக்கு விசாரணைக்காக வரும் ஏப். 27 ஆம் தேதி அவரும் ஹைதராபாத் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: போப் பிரான்சிஸ் மறைவு: 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் -மத்திய அரசு