ஷாருக்கான், ஆமீர் கான்.. புது வீட்டில் குடியேறும் பாலிவுட் பிரபலங்கள்; பட்ஜெட் ...
IPL 2025: ``விடுமுறையை கழிக்க வந்திருக்கிறார்கள்'' - சேவாக் விமர்சித்த `வெளிநாட்டு வீரர்கள்' யார்?
முன்னாள் இந்திய அதிரடி பேட்ஸ்மேன் விரேந்தர் ஷேவாக், இந்த IPL 2025 சீசனில் சொற்ப ரன்களே எடுத்துவரும் லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல்லை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இரண்டு வீரர்களும் இந்த சீசனில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருவதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் பிளேயிங் 11-ல் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.

மேக்ஸ்வெல் கடந்த இரண்டு போட்டிகளாக வெளியில் வைக்கப்பட்டுள்ளார். லிவிங்ஸ்டனுக்கு பதிலாக ஆர்.சி.பி ரொமாரியோ ஷெப்பர்டை களமிறக்கியிருக்கிறது.
சேவாக் இந்த இரண்டு வீரர்களிடமும் "தங்கள் அணியின் வெற்றிக்காக போராட வேண்டும் என்ற ஆசை வெளிப்படவில்லை" எனக் கூறியுள்ளார்.
"மேக்ஸ்வெல் மற்றும் லிவிங்ஸ்டனின் பசி போய்விட்டது என உணர்கிறேன். அவர்கள் இங்கே விடுமுறையைக் கழிக்க வந்துள்ளனர். அவர்கள் வருகிறார்கள், வேடிக்கைப் பார்க்கிறார்கள், கிளம்புகிறார்கள். தங்கள் அணியின் வெற்றிக்காக போராட வேண்டும் என்ற ஆசை வெளிப்படவில்லை" என்று சேவாக் பேசியுள்ளார்.

"நான் நிறைய முன்னாள் வீரர்களுடன் நேரத்தைச் செலவிட்டிருக்கிறேன், ஆனால் ஒன்றிரண்டு பேர் மட்டுமே எனக்கு 'ஆம், நான் உண்மையிலேயே அணிக்காக ஏதாவது செய்ய விரும்புகிறேன்' என்ற உணர்வைத் தந்தார்கள்" என்றும் கூறியுள்ளார்.
மேக்ஸ்வெல் இந்த சீசன் முழுவதும் 41 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார், 4 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். லிவிங்ஸ்டோன் 87 ரன்கள் அடித்திருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
