செய்திகள் :

IPL: ஸ்பான்ஸ்ர்ஷிப் டு டெலிகாஸ்ட்... அணிகள் வருமானம் ஈட்டுவது எப்படி? - ஐ.பி.எஸ் பிசினஸ் தெரியுமா?

post image

இன்றைக்கு கிரிக்கெட் உலகே பிசிசிஐயின் கையில்தான் இருக்கிறது எனலாம். பிசிசிஐ இத்தனை அதிகாரமிக்க கிரிக்கெட் போர்டாக மாறியதற்கு ஐ.பி.எல்லுமே ஒரு முக்கியக் காரணம்தான்.

ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் சீசன் தொடங்கி விட்டால் பிடித்த அணிகளையும், வீரர்களையும் கொண்டாடித் தீர்க்கிறோம். ஆனால், இந்த ஐபிஎல்-க்கு பின்னால் எவ்வளவு பணம் புரளுகிறது? ஐபிஎல் தொடர் மூலம் பிசிசிஐ எவ்வாறு பணம் சம்பாதிக்கிறது? ஐ.பி.எல் அணியின் உரிமையாளர்கள் எப்படி எல்லாம் வருமானம் ஈட்டுகிறார்கள்? வீரர்களுக்கு எப்படி இவ்வளவு சம்பளம் தரப்படுகிறது? என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? இத்தனைக் கேள்விகளுக்கானப் பதில்களும் இந்தக் கட்டுரையில்…

IPL Players
IPL Players

கால்பந்தின் பிரீமியர் லீக் பாணியைப் பின்பற்றி 2008 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல் தொடங்கப்பட்டது. ஐ.பி.எல்-க்கு முன்பே 2007 ஆம் ஆண்டு கபில்தேவ் ஐ.சி.எல் என்றத் தொடரை நடத்தினார். அந்தத் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆனால், பிசிசிஐக்கு அவர்களின் தயவின்றி ஒரு தொடரை நடத்துவதில் விருப்பமில்லை. அதனால் அந்த ஐ.சி.எல் தொடரில் ஆடிய வீரர்களையெல்லாம் தடை செய்தனர். அந்தத் தொடரையே முடக்கினர். அந்தத் தொடரை முழுங்கிவிட்டுதான் ஐ.பி.எல் என்கிற தொடரை பிசிசிஐ தொடங்கியது.

முதலில் 8 அணிகள்தான் பங்கேற்றிருந்தன. ஒவ்வொரு அணியும் தங்கள் மாநிலங்களைச் சேர்ந்த வீரர்களை Iconic வீரர்களாக தேர்வு செய்துகொள்ளலாம் என பிசிசிஐ அறிவித்தது. மும்பை அணி சச்சினையும், டெல்லி அணி சேவாக்கையும், பஞ்சாப் அணி யுவராஜ் சிங்கையும் தேர்ந்தெடுத்தது.

இப்படி ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கான Iconic வீரரை தேர்ந்தெடுக்க சென்னை மட்டும் ஏலத்திற்கு சென்று தோனியை அள்ளி வந்தது. எல்லா அணியிலும் இந்திய அணிக்காக ஆடும் ஸ்டார் வீரர்களும் வெளிநாட்டு லெஜண்டுகளும் கலவையாக இருக்க இந்தத் தொடரின் மீது பெரும் எதிர்பார்ப்பு உண்டானது.

IPL Fans
IPL Fans

ரசிகர்களின் ஆதரவைத் தாண்டி அதிக பணம் ஈட்டும் ஒரு விளையாட்டு போட்டியாகவும் ஐபிஎல் அப்போதே உருவெடுத்தது. இதனால் பல கோடீஸ்வரர்கள் ஐபிஎல்லில் அணியை வாங்க போட்டிப் போட்டு வருகின்றனர். எட்டு அணிகளாக இருந்தது தற்போது பத்து அணிகளாக உயர்ந்திருக்கிறது.

ஒவ்வொரு அணியின் உரிமையையும் அதன் உரிமையாளர்கள் ஏலத்தின் மூலம் வென்றே பெற்றிருக்கின்றனர். அதன்படி, 2008 இல் இருந்த 8 அணிகளையும் அதன் உரிமையாளர்கள் வாங்கிய தொகை,

மும்பை இந்தியன்ஸ் - 447.6 கோடி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 446 கோடி

டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதராபாத் - 428 கோடி

சென்னை சூப்பர் கிங்ஸ் - 364 கோடி

டெல்லி கேப்பிட்டல்ஸ் - 336 கோடி

பஞ்சாப் கிங்ஸ் - 304 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 300 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ் - 268 கோடி

ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே கூடுதலாக இரண்டு அணிகள் ஐ.பி.எல் இல் சேர்க்கப்பட்டது. அந்த அணிகளுக்கான உரிமைத்தொகையை கேட்டாலே ஐ.பி.எல் ஆரம்பக்கட்டத்திலேயே எப்பேர்ப்பட்ட வளர்ச்சியை நோக்கி செல்லத் தொடங்கியது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

Kochi Tuskers Kerala squad
Kochi Tuskers Kerala squad

கொச்சி டஸ்கர்ஸ் என்ற அணியை ரூ.1533 கோடிக்கும், புனே வாரியர்ஸ் என்கிற அணியை, ரூ.1702 கோடிக்கும் பிசிசிஐ விற்றிருந்தது. ஆனால், சில ஆண்டுகளிலேயே பொருளாதார காரணங்களால் இந்த அணிகள் ஐ.பி.எல் லிலிருந்து நீக்கப்பட்டன. 2022 சீசனுக்கு முன்பாக மீண்டும் புதிதாக இரண்டு அணிகளை பிசிசிஐ அறிமுகப்படுத்தியது.

அதில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் உரிமையை, ரூ.5652 கோடிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையை ரூ.7090 கோடிக்கும் பிசிசிஐ விற்றிருந்தது. 2008 இல் விற்கப்பட்ட மும்பை அணியின் உரிமையை விட லக்னோ அணியின் உரிமை கிட்டத்தட்ட 15 மடங்கு அதிகம். சீசனுக்கு சீசன் ஐ.பி.எல் எந்தளவுக்கு வளர்ந்து வருகிறது என்பதற்கு இதுவுமே ஒரு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு.

இதுபோக ஏலத்தில் கோடிகளைக் கொட்டி வீரர்களை அணிகள் ஏலத்திலும் வாங்குகின்றனர். எனில், அவர்களுக்கு எப்படியெல்லாம் வருமானம் கிடைக்கும்?

ஒவ்வொரு ஐபிஎல் உரிமையாளர்களும் ஏலத்தில் தங்களுக்கு வேண்டிய வீரர்களை எடுத்து ஒரு அணியை உருவாக்குகின்றனர். ஓடிடியில் ஸ்ட்ரீமிங், தொலைக்காட்சி உரிமை, ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் போன்றவற்றின் மூலம் ஐபிஎல் உரிமையாளர்கள் குறிப்பிட்ட வருவாயை பெறுகின்றனர். ஊடக உரிமைகள் மூலம் வருமானம் பெறுகின்றனர். அதேபோல மைதானத்தில் விற்கப்படும் டிக்கெடுகளில் குறிப்பிட்ட சதவீதம் அணியின் உரிமையாளர்களுக்கு சென்றடைகிறது.

IPL Owners
IPL Owners

ஒவ்வொரு ஆண்டும் மொத்தம் விளையாடப்படும் 14 போட்டிகளில் 7 போட்டிகள் சொந்த மைதானங்களில் நடைபெறும். அதிலிருந்து கிடைக்கும் வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை அணி உரிமையாளர்கள் பெறுகின்றனர். அதாவது கிடைக்கும் வருவாயில் 40 சதவிகிதம் பிசிசிஐயும், மீதமுள்ள 60 சதவிகிதம் ஐபிஎல் அணிகளும் பிரித்துக் கொள்ளும்.

ஸ்பான்சர்ஷிப் என்பது இரண்டு வகைகளாக இருக்கிறது. ஒன்று ஐபிஎல் தொடருக்காக செய்யப்படும் ஸ்பான்சர்ஷிப், மற்றொன்று ஐபிஎல் அணிகளுக்கான ஸ்பான்சர்ஷிப். உதாரணத்திற்கு டைட்டில் ஸ்பான்சர்ஷிப், ஒளிபரப்பு உரிமம் போன்ற பொதுவான ஸ்பான்சர்ஷிப் அனைத்துமே பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகள் பிரித்துக் கொள்ளும்.

sponsorship
sponsorship

அதாவது முன்பே கூறியது போல, 40 சதவீதம் பிசிசிஐயும், மீதமுள்ள 60 சதவீத்தை ஐபிஎல் அணிகளும் பிரித்துக் கொள்ளும். தற்போது ஐபிஎல்-லிற்கான டைட்டில் ஸ்பான்சர்சிப்பை டாடா குழுமம் (Tata Group) 2028ஆம் ஆண்டு வரை வாங்கி இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா 500 கோடி என மொத்தம் 2,500 கோடி ரூபாய்க்கு டாடா குழுமம் வாங்கி இருக்கிறது.

ஐபிஎல் உரிமையாளர்களுக்கு கூடுதல் வருவாய் ஆதாரமாக ஸ்பான்சர் நிறுவனங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு அணிகளுக்கும் தனித்தனியாக தங்கள் அணியின் ஜெர்சியில் ஸ்பான்சர் நிறுவனங்களின் லோகோ மற்றும் பெயர்கள் இடம்பெற ஒப்பந்தம் மேற்கொள்கின்றன. இது அவர்களின் வருவாயில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது.

sponsorship
sponsorship

மைதானத்தில் நேரில் போட்டிகளைக் காண ரசிகர்கள் டிக்கெட் வாங்குகிறார்கள். ஒவ்வொரு மைதானத்தில் விற்கப்படும் டிக்கெட் மூலம் வருவாய் கிடைக்கிறது. சொந்த மைதானத்தில் நடக்கும் போட்டிக்கான டிக்கெட்டின் விலையை ஐபிஎல் அணியே நிர்ணயிக்க முடியும். அதேபோல், டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கக்கூடிய பணத்தை 80:20 என்ற கணக்கில் போட்டியை நடத்தும் ஐபிஎல் அணியும், கிரவுண்ட் அசோஷியேசனும் பிரித்துக் கொள்ளும். உதாரணத்திற்கு, சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னையில் நடந்தால் சென்னை அணி கிரவுண்ட் அஷோசியேசனுடன் பகிர்ந்து கொள்ளும்.

மீடியா உரிமை விற்பனை ஐபிஎல் வருவாய் ஈட்டுவதில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. 2023-27 ஆண்டுக்கான ஒளிபரப்பு உரிமைகள் மொத்தமாக ரூ. 48,390 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது. இதில் தொலைக்காட்சி உரிமம் கிட்டத்தட்ட 23,000 கோடிக்கும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை 20,000 கோடிக்கும் விற்கப்பட்டிருந்தது.

2008 இல் ஐ.பி.எல் இன் ஒளிபரப்பு உரிமம் 10 ஆண்டுகளுக்கு 8200 கோடி ரூபாய்க்குதான் விற்பனை செய்யப்பட்டிருந்தது. அதேசமயத்தில், 2017 ஆண்டு மீண்டும் ஒளிபரப்பு உரிமம் ஏலத்துக்கு வந்தது.

 IPL streaming rights
IPL streaming rights

இந்த முறை வெறும் 5 ஆண்டுகளுக்கே 16,000 கோடி ரூபாய்க்கு டிவி + டிஜிட்டல் உரிமம் விற்கப்பட்டிருந்தது. இதிலிருந்து ஒப்பிட்டால் கூட 2023-27 ஆம் காலக்கட்டத்துக்கான உரிமம் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகியிருக்கிறது. அதிக வியாபாரத்தைக் கொண்ட உலகின் டாப் 5 லீக் போட்டிகளில் ஒன்றாக ஐ.பி.எல் லும் மாறியது. 2008 லிருந்து ஒப்பிடுகையில் இந்தியா டிஜிட்டலை நோக்கி எவ்வளவு வேகமாக நகர்ந்திருக்கிறது என்பதையும் ஐ.பி.எல் ஒளிபரப்பு உரிம விற்பனையிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

பிசிசிஐ க்கு ஐ.பி.எல் மூலம் வரும் வருமானம் பிசிசிஐ, மாநில அசோசியேஷன்கள், உள்ளூர் கிரிக்கெட் மேம்பாடு, ஐ.பி.எல் அணிகளுக்கு என சில பங்குகளாக பிரிக்கப்படும். இதன் மூலம்தான் ஐ.பி.எல் அணிகள் அதிக வருவாயை பெறுகின்றனர்.

ஐபிஎல் தொடரின் பரிசுத் தொகை என்பது ஸ்பான்சர்ஷிப்பை பொறுத்து பிசிசிஐ நிர்ணயிக்கிறது. அந்தவகையில், இந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.20 கோடியும், இரண்டாவது இடத்திற்கு ரூ.13 கோடியும், மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கு முறையே ரூ.7 மற்றும் ரூ.6.5 கோடியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் அணிகள் சம்பாதிக்கும் லாபத்திலேயே இதுதான் மிகவும் குறைந்ததாக இருக்கிறது.

IPL cup
IPL cup

பரிசுத்தொகையை விட ஐபிஎல் கோப்பையை வெல்வது தான் ஒரு அணியின் இலக்காக இருக்கும். ஏனென்றால், ஒரு அணி கோப்பையை வெல்வதன் மூலம், அந்த அணியின் பிராண்ட் ஸ்பான்சர்ஷிப் அதிகரிக்கிறது. இதன் மூலம் அந்த அணியின் விளம்பர வருவாய் அதிகரிக்கும்.

உலகிலேயே அதிக வணிக மதிப்புள்ள லீக்காக ஐ.பி.எல் வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது.!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

CSK: `பிளெமிங் உட்பட அணி நிர்வாகம் செய்த மிஸ்டேக்’ - சிஎஸ்கே செயல்பாடு குறித்து ரெய்னா அதிருப்தி

சிஎஸ்கே அணி ஐ.பி.எல்லில் இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு படுமோசமாக இந்த சீசனில் ஆடிவருகிறது. 8 ஆட்டங்களில் 2 ஆட்டங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருக்கிறது.குறிப்பாக 5 போட்டிகளில் தொடர்ச்சியாகத் தோல்... மேலும் பார்க்க

BCCI ஒப்பந்தம்: ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன் சேர்ப்பு; பட்டியலில் நீக்கப்பட்ட வீரர்கள் யார் யார்?

2025–26ஆம் ஆண்டிற்கான வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ தற்போது வெளியிட்டிருக்கிறது. ஆண்டுதோறும் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களின் ஒப்பந்தம் சார்ந்த விவரங்களை பிசிசிஐ வெளியிடும். அந்தவகையில் 2... மேலும் பார்க்க

IPL 2025 : 'அவரைப் பற்றி கவலைப்பட தேவையில்லை, அவர்...' - ரோஹித் பற்றி ஹர்திக் சொன்னது என்ன?

நேற்றையப் (ஏப்ரல் 21) போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதின. இதில் 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி சிஎஸ்கேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் மும்பை அணி 8 புள்ளிகள் பெற... மேலும் பார்க்க

IPL 2025: ``எனக்கு ஏன் ஆட்டநாயகன் விருது கொடுத்தீங்க..'' - விராட் கோலி ஓப்பன் டாக்

நேற்றையப் (ஏப்ரல் 20) போட்டியில் பஞ்சாப் அணியும், ஆர்சிபி அணியும் மோதின. இதில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றிருக்கிறது.இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓ... மேலும் பார்க்க

Rishabh Pant: ``பண்ட்டின் கேப்டன்சி highly underrated'' - கடைசி ஓவர் பிளானை விளக்கும் கைஃப்

ராஜஸ்தான் அணிக்கெதிராக லக்னோ அணி நேற்று முன்தினம் (ஏப்ரல் 19) விளையாடிய போட்டியில், 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ த்ரில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, மொத்தமாக 180 ரன... மேலும் பார்க்க

Rohit Sharma : 'சின்ன வயசுல க்ரவுண்டுக்குள்ளேயே விட மாட்டாங்க; ஆனா, இப்போ' - ரோஹித் நெகிழ்ச்சி

'மும்பை வெற்றி!'வான்கடேவில் சென்னைக்கு எதிராக நடந்த போட்டியை மும்பை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. அதிரடியாக ஆடி 76 ரன்கள் எடுத்து ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். விருத... மேலும் பார்க்க