செய்திகள் :

Rohit Sharma : 'சின்ன வயசுல க்ரவுண்டுக்குள்ளேயே விட மாட்டாங்க; ஆனா, இப்போ' - ரோஹித் நெகிழ்ச்சி

post image

'மும்பை வெற்றி!'

வான்கடேவில் சென்னைக்கு எதிராக நடந்த போட்டியை மும்பை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. அதிரடியாக ஆடி 76 ரன்கள் எடுத்து ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். விருதை வாங்கிவிட்டு ரோஹித் நெகிழ்ச்சியாக சில விஷயங்களைப் பேசியிருந்தார்.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

'ரோஹித் நெகிழ்ச்சி!'

ரோஹித் சர்மா பேசியதாவது, ''மஞ்சள் ஜெர்சி போட்டிருந்த ரசிகர்கள் கூட என்னுடைய இன்னிங்ஸை பாராட்டினார்கள் என்கிறீர்கள். அதுதான் வான்கடேவின் ஸ்பெஷல். நல்ல கிரிக்கெட் காண எப்போதுமே இந்த ரசிகர்கள் ஆவலாக இருப்பார்கள். ஒரு அணியாக நாங்கள் சரியான சமயத்தில் பார்முக்கு வந்திருக்கிறோம்.

நீண்ட காலம் கிரிக்கெட் ஆடிவிட்ட பிறகு, மிக எளிதாக நம் மீதே நமக்கு சந்தேகம் வரத் தொடங்கும். அதைத் தொடர்ந்து வித்தியாசமாக சில விஷயங்களை முயன்று பார்ப்போம். ஆனால், என்னைப் பொறுத்தவரைக்கும் அடிப்படையான விஷயங்களைச் சரியாக செய்து தெளிவான மனநிலையோடு இருக்க வேண்டும் என்றே யோசிப்பேன்.

சரியான பந்துகள் சிக்கும்போது சரியாக கைகளை விரித்து பெரிய ஷாட்களை ஆடுவது முக்கியம். இம்பாக்ட் ப்ளேயர் விதிமுறையை பற்றி நிறைய பேசிவிட்டோம். நான் நேராக பேட்டிங் ஆட மட்டுமே வந்தால் போதும் என நினைத்தாலும் நான் தவறாக எடுத்துக் கொள்ளமாட்டேன். என்னுடைய பெயரில் வான்கடே மைதானத்தில் ஒரு ஸ்டாண்ட் அமையவிருப்பது எனக்கு கிடைத்திருக்கும் பெரிய மரியாதை, பெரிய கௌரவம்.

Rohit Sharma
Rohit Sharma

நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். சிறுவயதில் ஒரு காலத்தில் எங்களை இந்த மைதானத்துக்குள்ளேயே அனுமதிக்கமாட்டார்கள். ஆனால், நான் என்னுடைய கிரிக்கெட் மொத்தத்தையும் இங்கேதான் ஆடியிருக்கிறேன். இப்போது இங்கே என் பெயரில் ஒரு ஸ்டாண்ட் என்பது எனக்கான பெரிய கௌரவம். என்னுடைய பெயர் அங்கே பொறிக்கப்படும் போது எப்படி ரியாக்ட் செய்வேன் எனத் தெரியவில்லை.' என ரோஹித் பேசியிருந்தார்.

Dhoni : 'இதுக்கெல்லாம் எமோஷனல் ஆகக்கூடாது!' - தோல்வி குறித்து தோனி

'சென்னை தோல்வி!'வான்கடேவில் நடந்த மும்பைக்கு எதிரான போட்டியை சென்னை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இழந்திருக்கிறது. நடப்பு சீசனில் சென்னை அணியின் 6 வது தோல்வி இது. போட்டிக்குப் பிறகு சென்னை அணியின் கே... மேலும் பார்க்க

MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்

'சென்னை தோல்வி!'வான்கடேவில் மும்பைக்கு எதிரான போட்டியில் தோற்றிருக்கிறது சென்னை அணி. தோல்வி ஒன்றும் புதிதில்லை. நடப்பு சீசனில் சென்னை அணியின் 6 வது தோல்வி இது. ப்ளே ஆப்ஸ் வாய்ப்பில் நீடிக்க சென்னை அணி... மேலும் பார்க்க

Ayush Mhatre: 2 சிக்சர்; 4 பவுண்டரி - 213 SR -ல் பவர் காட்டிய 17 வயது ஆயுஷ்'; இவரை விட்றாதீங்க CSK

'ஆயுஷ் அறிமுகம்!'வான்கடேவில் மும்பைக்கு எதிராக சென்னை அணி ஆடி வரும் ஆட்டத்தில் சென்னை சார்பில் ஆயுஷ் மாத்ரே எனும் 17 வயது இளம் வீரர் அறிமுகமாகி சிறப்பாக ஆடிவிட்டு சென்றிருக்கிறார்.Ayush. Mhatre'பின்னண... மேலும் பார்க்க

KKR : 'ஸ்ரேயஸ் ஐயரை ஏலத்துல விட்டதுக்கு இதுதான் காரணம்' - கொல்கத்தா சிஇஓ விளக்கம்

கொல்கத்தா அணியைக் கடந்த முறை சிறப்பாக வழிநடத்தி சாம்பியனாக்கியிருந்தார் ஸ்ரேயஸ் ஐயர். ஆனால், கொல்கத்தா அணி ஸ்ரேயாஷை தக்கவைக்கவில்லை. பஞ்சாப் அணி அவரை ஏலத்தில் எடுக்க இப்போது பஞ்சாப் அணிக்காக ஆடி வருகி... மேலும் பார்க்க

MI vs CSK : '17 வயசு பையனை லெவன்ல எடுத்திருக்கோம்!' - தோனி கொடுத்த அப்டேட்

'மும்பை vs சென்னை!'மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி வான்கடே மைதானத்தில் நடக்கவிருக்கிறது. சென்னை அணி இதுவரை 7 போட்டிகளில் ஆடி 2 போட்டிகளில் மட்டுமே வென்றிருக்கி... மேலும் பார்க்க

MI vs CSK : 'வான்கடேவில் சென்னை வெல்ல கவனிக்க வேண்டிய 3 விஷயங்கள்!' - என்னென்ன தெரியுமா?

'மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்!"மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி வான்கடே மைதானத்தில் நடக்கவிருக்கிறது. சென்னை அணி இதுவரை 7 போட்டிகளில் ஆடி 2 போட்டி... மேலும் பார்க்க