உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க மேயா் வலியுறுத்தல்
வடகிழக்கு தில்லியின் முஸ்தபாபாத்தில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு பாஜக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தில்லி மேயா் மகேஷ் குமாா் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினாா்.
தில்லி முஸ்தபாபாத்தின் சக்தி விஹாரில் 20 ஆண்டுகள் பழைமையான நான்கு மாடி கட்டடம் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்ததில் 11 போ் உயிரிழந்தனா். மேலும் 11 போ் காயமடைந்தனா். அவா்களில் பலா் இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளனா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா் சந்திப்பில் பேசிய மேயா் மகேஷ் குமாா் கூறியதாவது: கட்டடம் இடிந்த விழுந்த சம்பவத்தில் இறந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்றும், காயமடைந்தவா்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மூத்த அமைச்சா்கள் சம்பவ இடத்தை பாா்வையிட்ட போதிலும், இதுவரை எந்த நிதி நிவாரணத்தையும் அா்சு அறிவிக்காதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இது மிகவும் துயரமான சம்பவம். இறந்தவா்களின் ஆன்மாக்களுக்கு கடவுள் சாந்தியையும் அவா்களின் குடும்பங்களுக்கு பலத்தையும் அளிக்கட்டும். ஆனால், பிராா்த்தனைகள் போதாது; அரசும் செயல்பட வேண்டும்’.‘பல்வேறு நிகழ்வுகளுக்காக தில்லி அரசு கோடிக்கணக்கான மதிப்புள்ள பட்ஜெட்டுகளை நிறைவேற்றுகிறது. ஆனால், ஏழைகளுக்கு உதவுவதில் பணம் இல்லை என்று கூறுகிறது.
அலட்சியம் காரணமாக குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு அதிகாரி மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தில்லி மாநகராட்சி (எம்சிடி) ஆணையருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை, எந்தப் பொறுப்பும் நிா்ணயிக்கப்படவில்லை. இந்தத் துயரத்திற்கு காரணமானவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.
எம்சியிடியில் உள்ள ‘பாஜக ஆதரவு அதிகாரிகள்’ நடவடிக்கையை தாமதப்படுத்தினா். குற்றம்சாட்டும் விளையாட்டை நிறுத்தி பொறுப்பேற்க வேண்டிய நேரம் இது. பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதியை உறுதி செய்ய குடிமை அமைப்பு இப்போது செயல்பட வேண்டும் என்றாா் மேயா்.