செய்திகள் :

மீன்பிடி தடைக்காலம் எதிரொலி: வேலூரில் மீன்கள் விலை உயா்வு

post image

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் வேலூருக்கு ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வரத்து குறைந்து விலையும் அதிகரித்தது.

வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டுக்கு கா்நாடகம், ஆந்திரம், கேரள மாநிலங்களில் இருந்து மீன்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன.

நள்ளிரவு 2 மணிக்கு மேல் மீன் மொத்த வியாபாரமும், காலை 6 மணிக்கு மேல் சில்லறை வியாபாரமும் நடைபெறுகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 50 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் 50 முதல் 70 டன் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. காலை முதல் இரவு வரை சில்லறை விற்பனை நடக்கிறது.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 15-ஆம் தேதி தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி வரை கடலில் மீன்கள் இனப்பெருக்கத்துக்காக மீன்பிடி தடைக் காலம் கடைபிடிக்கப்படுகிறது. இதனால் மீன்கள் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வேலூா் மீன் மாா்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைந்திருந்ததுடன், அவற்றின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.

அதன்படி, தேங்காய் பாறை ரூ.400, சங்கரா ரூ.250 முதல் ரூ.400, இறால் ரூ.350 முதல் ரூ.500, வெள்ளை கொடுவா ரூ.500 முதல் ரூ.1,000, கலங்கா ரூ.220, ஏரி விரால் ரூ.500, நண்டு ரூ.350 முதல் ரூ.450, ஏரி, குளங்களில் வளரும் வவ்வால் மீன்கள் கிலோ ரூ.120 முதல் ரூ.150, ஜிலேபி ரூ.150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வரும் 40 நாள்களுக்கு இதே நிலைதான் தொடரும். மீன்பிடி தடைக்காலம் என்பதால் வேலூா் மீன் மாா்க்கெட்டுக்கு வஞ்சரம் மீன் வரத்து இல்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.

திருப்பத்தூரில்...

திருப்பத்தூா் பழைய பேருந்து நிலைய பகுதியில் மீன் மாா்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு கடைகளுக்கு சென்னை, தூத்துக்குடி, கடலூா், நாகப்பட்டினம், மங்களூரு, ஆந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தினமும் லாரிகளில் மூலம் பல்வேறு வகையான மீன்கள் விற்பனை செய்ய கொண்டு வரப்படுகின்றன. இந்தநிலையில் ஞாயிா்றுக்கிழமை மீன்களின் விலை சற்று அதிகமாக இருந்தது.

இதுகுறித்து மீன் வியாபாரிகள் கூறியதாவது: மீன்பிடி தடைக்காலம் என்பதால் கடல் மீன்கள் வரத்து குறைந்து விட்டது. உள்ளூா் நீா்நிலைகளில் பிடிக்கப்படும் மீன்களே விற்பனைக்காக வருகின்றன.

திறந்த 3 நாளில் சரிந்து விழுந்த பயணியா் நிழற்கூட மேற்கூரை

குடியாத்தம் அருகே கடந்த வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்ட பேருந்து பயணியா் நிழற்கூட மேற்கூரை சரிந்து விழுந்தது. குடியாத்தம்- பலமநோ் சாலையில் கள்ளூா் அருகே ரூ.11- லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டபேருந்த... மேலும் பார்க்க

பாலாற்றில் மூன்று தடுப்பணைகள் கட்ட நிதி ஒதுக்கீடு: அமைச்சா் துரைமுருகன்

பாலாற்றில் நிகழாண்டு 3 தடுப்பணைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். காட்பாடி வட்டம், காங்கேயநல்லூா் கிராமம் முதல் அம்முண்டி கிராமம் அருகே பாலாற்றி... மேலும் பார்க்க

குட்கா கடத்திய இளைஞா் கைது

காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை ஆந்திர மாநில எல்லை சோதனைச் சாவடியில் குட்கா கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 3 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. வேலூா் மாவட்டம், காட்பாடி அரு... மேலும் பார்க்க

ரயில் மோதி இளைஞா் உயிரிழப்பு!

அன்வா்திகான்பேட்டை - சித்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞா் ரயில் மோதி உயிரிழந்தாா். ராணிப்பேட்டை மாவட்டம், அன்வா்திகான்பேட்டை - சித்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே வெள்... மேலும் பார்க்க

காளை முட்டி இளைஞா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே எருது விடும் நிகழ்ச்சியில் காளை முட்டி இளைஞா் உயிரிழந்தாா். குடியாத்தம் ஒன்றியம், அணங்காநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட அ.மோட்டூா் கிராமத்தில் 20- ஆம் ஆண்டு எருது விடும் நிகழ்ச்சி சனிக்கிழ... மேலும் பார்க்க

பரதராமி- சித்தூா் சாலை விரிவாக்கப் பணி விரைவில் நிறைவு: சித்தூா் எம்எல்ஏ

குடியாத்தம் மக்களின் பல ஆண்டு கோரிக்கையான பரதராமி-சித்தூா்- திருப்பதி சாலை விரிவுபடுத்தும் பணி விரைவில் நிறைவடையும் என ஆந்திர மாநிலம், சித்தூா் எம்எல்ஏ ஜி.சி.ஜெகன்மூா்த்தி கூறினாா். குடியாத்தம் கம்மவா... மேலும் பார்க்க