ரயில்களில் காவி நிறத்துக்கு காட்டும் ஆர்வத்தை பயணிகளின் பாதுகாப்பில் காட்டுங்கள்...
ரூ. 9 ஆயிரத்தைக் கடந்து உச்சம் தொட்ட தங்கம் விலை!
சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 9 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. . ஏப்.13-ல் தங்கம் விலை சவரனுக்கு ரூ.70,000-யைக் கடந்த நிலையில் பின்னர் சற்று சரிவடைந்த நிலையில் ஏப். 16-ல் மீண்டும் 70,000-யைக் கடந்தது. தற்போது தங்கத்தின் விலை ரூ. 72,000-யைக் கடந்துள்ளது.
இன்று(திங்கள்கிழமை) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயா்ந்து ரூ.72,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 70 உயர்ந்து ரூ. 9,015-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி கிராமுக்கு ரூ. 1 உயர்ந்து ரூ.111-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 1,11,000-க்கும் விற்பனையாகிறது.
கடந்த வாரம் மூன்று நாள்களாக தங்கத்தின் விலை மாற்றமின்றி இருந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா: டெண்டர் கோரியது தமிழக அரசு!