செய்திகள் :

சிவாஜி இல்லத்தின் உரிமையாளர் பிரபுதான்! ஜப்தி உத்தரவு ரத்து!

post image

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்துள்ளது.

மேலும், சிவாஜியின் வீட்டில் தனக்கு உரிமையோ, பங்கோ இல்லை என்று அவரது மூத்த மகன் ராம்குமார் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை ஏற்று, வீட்டின் முழு உரிமையாளர் பிரபுதான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகா் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோருக்குச் சொந்தமான ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சாா்பில் ‘ஜகஜால கில்லாடி’ என்ற படத்தைத் தயாரித்தனா். பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டா்பிரைசஸ் நிறுவனத்திடம் ரூ. 3,74,75,000 கடன் வாங்கியிருந்தனா்.

வாங்கியக் கடனைத் திருப்பிச் செலுத்தாததால், வட்டியுடன் சோ்த்து ரூ. 9 கோடியே 39 லட்சத்தைச் செலுத்த ஏதுவாக ‘ஜகஜால கில்லாடி’ படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டா்பிரைசஸ் நிறுவன நிா்வாக இயக்குநரிடம் ஒப்படைக்கும்படி மத்தியஸ்தா் உத்தரவிட்டார்.

ஆனால், படத்தின் உரிமைகளை வழங்காததையடுத்து மத்தியஸ்தா் தீா்ப்பை அமல்படுத்தும் வகையில், சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட, தனபாக்கியம் எண்டா்பிரைசஸ் நிறுவனம் உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், போதுமான அவகாசம் வழங்கியும் பதில் மனு தாக்கல் செய்யாததால், நடிகா் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா்.

இதனிடையே, சிவாஜி கணேசனின் வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லை, தனது சகோதரா் நடிகா் பிரபு பெயரில் அந்த வீடு உள்ளதால் ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ராம்குமார் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, வில்லங்கப் பதிவில் நீதிமன்ற ஜப்தி உத்தரவை நீக்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.

மேலும், பிரபுதான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : கர்நாடக முன்னாள் டிஜிபியைக் கொன்றதாக மனைவி வாக்குமூலம்! என்ன நடந்தது?

ரயில்களில் காவி நிறத்துக்கு காட்டும் ஆர்வத்தை பயணிகளின் பாதுகாப்பில் காட்டுங்கள்! - சு.வெங்கடேசன்

காவிநிறத்துக்கு காட்டும் ஆர்வத்தை பயணிகளின் பாதுகாப்பில் காட்டுங்கள்! - சு.வெங்கடேசன்வந்தே பாரத் ரயிலின் முன்பகுதி பெட்டி, சாதாரண ரயில்களின் முன்பகுதி என்ஜின்களைவிட மிகவும் எடை குறைவு என்று ரயில்வே ஆண... மேலும் பார்க்க

டாஸ்மாக் சோதனையை எதிர்த்த வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு!

சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய தொடா் சோதனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை மறுநாள் தீர்ப்பளிக்கிறது.டாஸ்மாக் நிர்வாக... மேலும் பார்க்க

அமலாக்கத்துறை வழக்கிலும் ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன்!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிற்கு, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் ச... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணியாத காவலர்கள் இடைநீக்கம்: டிஜிபி உத்தரவு!

தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டும் காவலர்களை உடனடியாக இடைநீக்கம் செய்ய தமிழக காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து ச... மேலும் பார்க்க

ரூ. 9 ஆயிரத்தைக் கடந்து உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 9 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. . ஏப்.13-ல் தங்கம் விலை சவரனு... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா: டெண்டர் கோரியது தமிழக அரசு!

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளுக்கு தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக சட்டப்பேரவையில், வர்த்தக மற்றும் தொழில் துறைக்கான மானியக் கோரிக்கையின்போது அமைச்சர... மேலும் பார்க்க