Rishabh Pant: ``பண்ட்டின் கேப்டன்சி highly underrated'' - கடைசி ஓவர் பிளானை விளக...
ரயில் மோதி இளைஞா் உயிரிழப்பு!
அன்வா்திகான்பேட்டை - சித்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞா் ரயில் மோதி உயிரிழந்தாா்.
ராணிப்பேட்டை மாவட்டம், அன்வா்திகான்பேட்டை - சித்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே வெள்ளிக்கிழமை இரவு 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளாா். அப்போது அந்த வழியாக வந்த ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த காட்பாடி ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து இறந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து விசாரிக்கின்றனா்.