``சில தருணங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது'' - மெஸ்ஸி அனுப்பிய கிப்ஃட்; நெகிழ்ந்த மோகன்லால்
மலையாள சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். அவரது நடிப்பில் சமீபத்தில் L2: எம்புரான் படம் வெளியானது.
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும் 325 கோடி வசூல் செய்த மலையாள சினிமாவின் முதல் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்திருந்தது. இதனைத்தொடர்ந்து ‘ஹ்ருதயபூர்வம்’ என்ற படத்தில் மாளவிகா மோகனுடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மோகன்லால் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி தனது ஜெர்சியில் மோகன்லால் பெயரை எழுதி, அவருக்கு வாழ்த்து தெரிவித்து, கையொப்பம் இட்டிருக்கிறார்.
இது குறித்து மோகன்லால் வெளியிட்டிருக்கும் பதிவில், “வாழ்க்கையில் சில தருணங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு ஆழமாக இருக்கும். அவை என்றும் நினைவில் நிற்கும். இன்று எனக்கு அப்படியொரு மறக்க முடியாத தருணம் கிடைத்தது.

எனக்கு கொடுக்கப்பட்ட பரிசை நான் மெதுவாக திறந்தப்போது, என் இதயம் துடித்தது - ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி கையெழுத்திட்ட ஜெர்சி எனக்கு பரிசாக வழங்கப்பட்டது. மெஸ்ஸியின் ஜெர்சியில் என் பெயர், அதுவும் அவர் தன் கைப்பட எழுதி இருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சி. இந்த தருணம் என் வாழ்க்கையில் மிகவும் சிறப்பானது” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
Some moments in life feel too profound for words. They stay with you forever.
— Mohanlal (@Mohanlal) April 20, 2025
Today, I experienced one of those moments. As I gently unwrapped the gift, my heart skipped a beat—a jersey signed by the legend himself, Lionel Messi. And there it was… my name, written in his own… pic.twitter.com/V1HXjDjH89
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...