செய்திகள் :

Nazriya: "மன்னித்துவிடுங்கள்... நலமடைந்து வருகிறேன்!" - நஸ்ரியா திடீர் அறிக்கை!

post image

நீண்டநாள்கள் பொதுவெளியில் தோன்றாதது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை நஸ்ரியா நசிம் ஃபகத்.

அந்த அறிக்கையில் நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிவோரால் தொடர்புகொள்ள முடியாத நிலையில் இருந்ததற்கு மன்னிப்புக் கோரியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் தனியிடம் பிடித்த நடிகை நஸ்ரியா, திருமணத்தைத் தொடர்ந்த விலகளுக்குப் பிறகு ட்ரான்ஸ், அடடே சுந்தரா போன்ற படங்களில் நடித்திருந்தார். தொடர்ந்து படபிடிப்புகளில் பங்கேற்கவில்லை என்றாலும் அவரது படங்கள் குறிப்பிடத்தக்க வகையில் வெற்றி பெற்றன.

சூக்‌ஷ்மதர்சினி
சூக்‌ஷ்மதர்சினி

கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான சூக்‌ஷ்மதர்சினி திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

அந்த திரைப்படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு நஸ்ரியா பொதுவெளியில் தோன்றவில்லை. சமூக வலைத் தளங்களிலும் ஆக்டிவாக இல்லை.

நஸ்ரியா நசிம் அறிக்கை:

"நான் இத்தனை நாள் விடுபட்டுப் போனது ஏன் எனத் தெரிவிக்க விரும்புகிறேன். நான் இந்த சமூகத்தின் மிகவும் ஆக்டிவான உறுப்பினராக இருந்திருக்கிறேன்.

ஆனால் கடந்த சில மாதங்களாக என் உணர்வு ரீதியிலான பிரச்னைகள் தனிப்பட்ட சவால்களுடனான போராட்டம் கடுமையானதாக இருந்ததால் என்னால் பொதுவெளியில் இருக்க முடியவில்லை.

 நஸ்ரியா
நஸ்ரியா

என்னுடைய 30வது பிறந்தநாள், புத்தாண்டு, என் சூக்‌ஷ்ம தர்சினி திரைப்படத்தின் வெற்றி மற்றும் பல முக்கிய நிகழ்வுகளை தவறவிட்டுவிட்டேன்.

நான் ஏன் விடுபட்டேன், உங்கள் கால்கள், மெஸ்ஸேஜ்களுக்கு பதிலளிக்காமல் இருந்தேன் என்பதை விளக்காததற்காக என் நண்பர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நான் ஏற்படுத்திய கவலைகளுக்காகவும் அசௌகரியத்துக்காகவும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

என்னை பணி நிமித்தமாக தொடர்புகொள்ள முயன்ற சக பணியாளர்களுக்கும் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

பாஸிடிவாக, நான் நேற்று சிறந்த நடிகருக்கான கேரளா திரை விமர்சகர்கள் விருதைப் பெற்றேன் என்பதைக் கூறுவதில் சிறப்பாக உணர்கிறேன். எனக்கு கிடைத்த அங்கீகாரத்துக்கு நன்றி, அனைத்து நாமினிகள் மற்றும் வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள்.

இது கடுமையான பயணம் ஆனால் நான் ஒவ்வொரு நாளும் நலமடைந்து வருகிறேன் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க நினைக்கிறேன். இந்த நேரத்தில் உங்கள் புரிதலுக்கும் ஆதரவுக்கும் நன்றி.

நான் முழுவதுமாக திரும்பி வர சில நாட்கள் ஆகலாம், ஆனால் நான் சத்தியம் செய்கிறேன், நான் குணமாவதற்கான பாதையில் இருக்கிறேன்.

திடீரென மறைந்ததற்காக என் நண்பர்கள், குடும்த்தினர் மற்றும் ரசிகர்களுக்கு விளக்கம் அளிப்பது என் கடமை என நினைத்ததால் இதை எழுதியுள்ளேன்.

லவ் யூ ஆல்... விரைவில் மீண்டும் கனெக்ட் ஆகலாம்

என்னுடன் இருந்து முடிவில்லாத ஆதரவை அளிப்பதற்கு நன்றி" என எழுதியுள்ளார்.

இந்த அறிக்கை ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் நஸ்ரியா மீண்டும் சமூக வலைத்தளங்களிலும் திரையிலும் விழாக்களிலும் தோன்றுவதற்காக ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

Bazooka:``அதோடு நானும், நீங்களும், நாமும்...''- மம்மூட்டி நம்பிக்கை

மம்மூட்டி நடித்திருக்கும் `பசூகா' திரைப்படம் நாளைய தினம் வெளியாகிறது. மம்மூட்டியின் இந்தத் திரைப்படத்தையும் அறிமுக இயக்குநர் டீனோ டெனிஸ் இயக்கியிருக்கிறார். மலையாள சினிமாவுக்கு பல இயக்குநர்களை மம்மூட்... மேலும் பார்க்க

Marana Mass: செளதி அரேபியா, குவைத்தில் தடை செய்யப்பட்ட பேசில் ஜோசப் படம் - இதுதான் காரணமா?

`பொன்மேன்' திரைப்படத்திற்குப் பிறகு பேசில் ஜோசப் நடிப்பில் வெளியாக இருக்கிற திரைப்படம் `மரண மாஸ்'. டார்க் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை நடிகர் டொவினோ தாமஸ் தயாரித்திருக்கிறார். படத்தை அறிம... மேலும் பார்க்க

`எம்புரான்' பட தயாரிப்பாளரிடம் ரூ.1.5 கோடி பறிமுதல்; அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `லூசிஃபர்'. இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் `எல் 2: எம்புரான்' கடந்த 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியா... மேலும் பார்க்க

L2 Empuraan: சர்ச்சைகளை தொடர்ந்து ப்ரித்விராஜுக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ்!

L2 Empuraan சர்ச்சை:ப்ரித்விராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் `எல் 2: எம்புரான்' திரைப்படம் வெளியாகியிருந்தது. மோகன் லால் நடித்திருக்கும் இத்திரைப்படத்திற்கு பல்வேறு சர்ச்சைகளும் எழுந்திருந்தது. படத்தில் க... மேலும் பார்க்க

Empuraan: ‘எம்புரான்’ பட தயாரிப்பாளருக்கு சொந்தமான நிறுவனங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை

'எம்புரான்' படத்தின் தயாரிப்பு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019... மேலும் பார்க்க

L2: எம்புரான் படத்திற்குத் தடை கோரிய கேரள பாஜக நிர்வாகி சஸ்பெண்ட்; பின்னணி என்ன?

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `லூசிஃபர்'. இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் `எல் 2: எம்புரான்' கடந்த 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியா... மேலும் பார்க்க