செய்திகள் :

Empuraan: ‘எம்புரான்’ பட தயாரிப்பாளருக்கு சொந்தமான நிறுவனங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை

post image

'எம்புரான்' படத்தின் தயாரிப்பு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `லூசிஃபர்'. இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் `எல் 2: எம்புரான்' கடந்த 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை கோகுலம் மூவிஸ், லைகா புரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

எம்புரான்
எம்புரான்

சமீபத்தில் வெளியான இந்தத் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறது. குஜராத் மதக்கலவரத்தைப் போலக் காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தாக, வலதுசாரிகள் எம்புரானைக் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

தவிர இதில் ஹிந்து மதத்தினரைப் புண்படுத்தும் விதமாக சில காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதனை நீக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதேபோல, முல்லைப்பெரியாறு அணை குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகத் தமிழகத்திலும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.

இந்நிலையில், கோகுலம் குழும நிறுவனங்களில் ஒன்றான கோகுலம் சிட்பண்ட்ஸ் நிதி நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோகுலம் கோபாலன் வீடு உள்பட கோகுலம் சிட்பண்ட்ஸ் தொடர்பாக 5 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோகுலம் குழுமத்தின் ஒரு நிறுவனமான கோகுலம் மூவிஸ் தயாரித்த 'எம்புரான்' திரைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்நிறுவனம் தொடர்பான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`எம்புரான்' பட தயாரிப்பாளரிடம் ரூ.1.5 கோடி பறிமுதல்; அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `லூசிஃபர்'. இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் `எல் 2: எம்புரான்' கடந்த 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியா... மேலும் பார்க்க

L2 Empuraan: சர்ச்சைகளை தொடர்ந்து ப்ரித்விராஜுக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ்!

L2 Empuraan சர்ச்சை:ப்ரித்விராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் `எல் 2: எம்புரான்' திரைப்படம் வெளியாகியிருந்தது. மோகன் லால் நடித்திருக்கும் இத்திரைப்படத்திற்கு பல்வேறு சர்ச்சைகளும் எழுந்திருந்தது. படத்தில் க... மேலும் பார்க்க

L2: எம்புரான் படத்திற்குத் தடை கோரிய கேரள பாஜக நிர்வாகி சஸ்பெண்ட்; பின்னணி என்ன?

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `லூசிஃபர்'. இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் `எல் 2: எம்புரான்' கடந்த 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியா... மேலும் பார்க்க

Empuraan: ``என் மகனை பலிகொடுக்க முயற்சிக்கிறார்கள்; இது தாயின் வலி'' - ப்ரித்விராஜின் தாயார் வேதனை

ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன் லால் நடித்திருக்கும் `எம்புரான்' படத்திற்கு சர்ச்சைகள் எழுந்திருக்கிறது. படத்தில் இடம்பெற்றிருக்கும் கலவரம் தொடர்பான காட்சிகள் 2002-ம் ஆண்டு நிகழ்ந்த குஜாராத் கலவர சம்பவ... மேலும் பார்க்க

Empuraan: எம்புரானுக்கு எழுந்த சர்ச்சை; 17 கட்களை மேற்கொள்ள படக்குழு திட்டம்

ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் ஆகியோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது ̀எல் 2: எம்புரான்'. இத்திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ̀லூசிஃபர்' படத்தின் ... மேலும் பார்க்க

L2 Empuraan: தவறாகச் சித்தரிக்கும் காட்சிகள்; நீக்கக்கோரி விவசாய சங்கம் போராட்டம் அறிவிப்பு

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் எம்புரான் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப்படம் 2019-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற லூசிஃபர் படத்தின் 2 ஆம் பாகம். இந்தத் திரைப்படத்தில் 2002 ... மேலும் பார்க்க