செய்திகள் :

Modi TN Visit: திறந்துவைத்து, பச்சைக்கொடி அசைத்த பிரதமர் மோடி; பாம்பன் பாலத்தைக் கடந்து சென்ற ரயில்!

post image

இலங்கை விசிட்டை முடித்துவிட்டு, அங்கிருந்து இன்று மதியம் 12.40 மணியளவில் ராமேஸ்வரம் வந்தார் பிரதமர் மோடி. தமிழக அரசு சார்பில் மோடியை வரவேற்ற ஆளுநர் ரவி, கம்பராமணம் புத்தகத்தைப் பரிசாக வழங்கினார்.

சரியாக மதியம் 1 மணியளவில் பச்சைக் கொடி அசைத்து புதிய பாம்பன் பாலத்தைத் திறந்து வைத்தார். இதையடுத்து சிறப்பு ரயில் ஒன்று புதிய பாலத்தின் மீது ராமேஸ்வரம் நோக்கி சென்றது. இதனை தொடர்ந்து புதிய மற்றும் பழைய தூக்கு பாலங்கள் திறக்கப்பட்டு அதன் வழியாக கடலோரக் காவல்படை கப்பல் இரு பாலங்களையும் கடந்து சென்றது. இதனை பாம்பன் சாலை பாலத்தில் அமைக்கப்பட்ட மேடையின் மீது நின்றபடி பிரதமர் மோடி பார்வையிட்டார். இதன் நினைவாக பாம்பன் பாலத்தின் சிறிய வடிவைப்புப் பெட்டகம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது பிரதமர் மோடிக்கு.

புதியாக திறக்கப்பட்ட பாம்பன் பாலத்தில் சிறப்பு ரயில் ஓட்டம்

இதை முடித்துவிட்டு இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகளைச் செய்யவிருக்கிறார். இதையடுத்து சில அரசியல் புள்ளிகள் உடனான சந்திப்பு நடைபெறவிருக்கிறது. மேலும், அடுத்தடுத்து சில திட்டங்களுக்கு அடிகல் நாட்டும் நிகழ்வுகளும், தமிழ்நாடு - ஆந்திரா எல்லையை இணைக்கும் நான்கு வழிச்சாலை திட்டத்தையும் திறந்து வைக்கவிருக்கிறார். இதை முடித்த கையோடு மதுரைக்குச் செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

"சென்னை பத்திரிகையாளர் மன்ற உட்கட்டமைப்பு வசதிக்காக ரூ.2.5 கோடி ஒதுக்கீடு" - உதயநிதி அறிவிப்பு

இந்தியன் ஆயில் நிறுவனமும், சென்னை பத்திரிக்கையாளர் மன்றமும் இணைந்து பத்திரிகையாளர்களுக்கு கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்தி முடித்திருக்கிறது. முன்னதாக, இத்தொடருக்கான அறிவிப்பில், சாம்பியன் பட்டம் வெல்... மேலும் பார்க்க

Modi: `காங்கிரஸை விட அதிகமான நிதியை தமிழ்நாட்டிற்கு தந்திருக்கிறோம்' - பிரதமர் மோடி உரை

இலங்கை விசிட்டை முடித்துவிட்டு, அங்கிருந்து இன்று மதியம் 12.40 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்தார் பிரதமர் மோடி. தமிழக அரசு சார்பில் மோடியை வரவேற்ற ஆளுநர் ரவி, கம்பராமணம் புத்தகத்தைப் பரிசா... மேலும் பார்க்க

ராஜபாளையம்: இரண்டு நாளில் 80 பேரைக் கடித்த தெருநாய்கள்- பொதுமக்கள் அச்சம்

ராஜபாளையம் நகராட்சியில் தெரு நாய்கள் தொல்லையால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். சிகிச்சைக்கு வந்தவர்கள்எனவே, ராஜபாளையம் சுற்றுவட்டாரத்தில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்... மேலும் பார்க்க

Waqf: `முஸ்லிம்களை அடுத்து கிருஸ்த்துவர்களை குறிவைக்கிறது பாஜக...' - செல்வப்பெருந்தகை

நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் திருத்த மசோதா 2025-ஐ பாஜக கூட்டணி அரசு நிறைவேற்றியிருந்தது. இந்த விவகாரத்தில், `சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தில் பாஜக அரச... மேலும் பார்க்க

Waqf: ஒப்புதல் வழங்கிய முர்மு; நடைமுறைக்கு வந்த வக்ஃப் திருத்த மசோதா; முக்கிய திருத்தங்கள் இவைதான்!

நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் திருத்த மசோதாவை, 2025-ஐ பாஜக கூட்டணி அரசு நிறைவேற்றியிருந்தது. இந்த விவகாரத்தில், `சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தில் பாஜக ... மேலும் பார்க்க

Modi TN Visit: பாம்பன் பாலம் திறப்பு `டு' ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் - மோடி விசிட் அப்டேட்ஸ்!

இலங்கை விசிட்டை முடித்துவிட்டு, இன்று மதியம் ராமேஸ்வரம் வருகிறார் பிரதமர் மோடி. ராமநாதசுவாமி கோயிலில் பகல் 12.45 மணியளவில் பிரதமர் மோடி தரிசனம், பூஜை செய்ய உள்ளார். பிரதமர் மோடி வருகையையொட்டி இன்று ரா... மேலும் பார்க்க