செய்திகள் :

தூத்துக்குடி: முகநூலில் நட்பு... ரூ.33.73 லட்சம் பணத்தை ஏமாற்றிய கணவன் - மனைவி கைது!

post image

தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு பெண் ஒருவர், முகநூல்  வழியாக அறிமுகமாகி நட்புடன் பேசி வந்துள்ளார். பின்னர், தனக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வந்துள்ளதாகவும் அதற்கு பணம் தேவைப்படுவதாகவும் அந்த நபரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த நபர், அந்தப் பெண்ணின் வார்த்தையை நம்பி அவருக்கு ரூ.33,73,000 பணத்தைக் கொடுத்துள்ளார். பின்னர்,  தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த அந்த நபர், இதுகுறித்து NCRP-ல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானின் உத்தரவின்படி தூத்துக்குடி சைபர் கிரைம் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

ஆல்பர்ட் ஜான் – எஸ்.பி

விசாரணையில், கேரள மாநிலம் இடுக்கி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன்  மற்றும் அவரின் மனைவி ஆகிய இருவரும் சேர்ந்து அந்த  நபரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து சைபர் கிரைம் பிரிவு போலீஸார் பாலமுருகன் மற்றும் அவரது மனைவியை கைது செய்தனர். இதேபோன்று தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் தஞ்சாவூர் சைபர் குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2022-ம் ஆண்டு பாலமுருகனை கைது செய்து சிறையில் அடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

தப்பிப்பது எப்படி?

இது போன்ற கும்பல்களால் மக்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள், ஆன்லைன் மோசடியிலிருந்து எப்படி தப்பிப்பது என தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீஸாரிடம்  பேசினோம், “ஆன்லைன் மோசடியில் படித்தவர்களே அதிகம் ஏமாற்றப்படுகிறார்கள். பண ஆசை காட்டித்தான் பெரும்பாலும் மோசடிகள் நடக்கிறது. அதிக லாபம் வீட்டிலிருந்தே வேலை எனச் சொல்லி முதலில் சிறிய தொகையை கட்டணமாக கட்டச் சொல்வார்கள். இரண்டு மாதம், மூன்று மாதம் அவர்கள் சொன்னதுபடி பணம் வந்து கொண்டே இருக்கும். அடுத்ததாக ஆசையை தூண்டி பெரிய தொகையை கட்டச் சொல்வார்கள். அதன்பிறகு பதில் இருக்காது. சில நூறுகள், ஆயிரங்களைத் தாண்டி லட்சக் கணக்கில் ஏமாந்தவர்கள்தான் அதிகம்.

சைபர் கிரைம்

டெலிகிராம், வாட்ஸ் அப், பேஸ் புக்  மூலம் முதலில் நட்பாக அறிமுகமாகி ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்திய பிறகே ஏமாற்று விளையாட்டு ஆரம்பமாகிறது. அடுத்ததாக ஆவணங்கள் இன்றி லோன் தருகிறோம் என லோன் ஆப்கள் மூலமும் ஏமாற்றப்படுகிறார்கள்.  அமெரிக்கா பம்பர் பரிசு, இங்கிலாந்து கிஃப்ட்   என்றெல்லாம் கிப்ஃட்களின் பெயரிலும் மோசடி நடக்கிறது. உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கிறது. பார்சலை ஸ்கேன் செய்ததில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் போல தெரிகிறது.

உங்கள் பெயர், விவரம் வெளியிட்டு கைது செய்ய வேண்டாம் என்றால் இவ்வளவு தொகை கட்டணமாக செலுத்த வேண்டும் என ஏர்போர்ட், கஸ்டம்ஸ், ஜி.எஸ்.டி அதிகாரி எனச் சொல்லி வீடியோ காலில் வரச் சொல்லி அலுவலகம் போன்ற செட் அப்பில் டிப் டாப் ஆசாமி அதிகாரி போல பேசி மிரட்டுவார். அதை நம்பி பணத்தை அனுப்புவார்கள். போலீஸ் அதிகாரி போல தனி அறையில் அமர்ந்து பின்புலத்தில் வாக்கிடாக்கி சத்தம் கேட்கும் படியான சூழலை உருவாக்கி மிரட்டுவார்கள். அந்த நபர் பார்ப்பதற்கு ஒரிஜினல் போலீஸ் போன்ற தோற்றத்தில் அமர்ந்து பேசுவதைப் பார்த்து பயந்துவிடுவார்கள்.  

சைபர் கிரைம்

ஆணாக இருந்தால் பெண்ணுடனும், பெண்ணாக இருந்தால் ஆணுடனும் நெருக்கமாக இருப்பது போன்று மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை அனுப்பியும் மிரட்டி பணம் பறிப்பார்கள். இதில்,  புகைப்படங்களை விட மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்கள்தான் அதிகம். ஆண்களை விட பெண்களே இதில் அதிகம் குறி வைக்கப்படுகிறார்கள். இதில் கிரிப்டோகரன்சி, பிட் காயின் மோசடி தனி குரூப்பாக செயல்படுவார்கள். தெரியாத நபர்கள் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் வீடியோ கால்   மூலம் தொடர்பு கொண்டால் பதில் அளிக்க வேண்டாம். தனியார் இணைய வியாபார நிறுவனங்களின் பெயரை சொல்லி, அங்கிருந்து கார் பரிசாக விழுந்துள்ளது எனச் சொல்லி பணம் கட்டச் சொன்னால் பணம் கட்டாதீர்கள்.

சமூக வலைதளங்களில் முகவரி, தொலைபேசி எண், இருப்பிடம் போன்ற தனிப்பட்ட தகவல்கள் அல்லது புகைப்படங்களை பகிரவோ பரிமாறவோ வேண்டாம். Any Desk, Team Viewer போன்ற Screen sharing செயலிகளை உங்கள் சாதனங்களில் Install செய்யாதீர்கள். கணினியுடன் இணைக்கும் போது எப்போதும் USB சாதனங்களை வைரஸ்களுக்காக ஸ்கேன் செய்யவும். பரிவர்த்தனைக்காக ஸ்வைப் செய்வதற்காக விற்பனையாளரை உங்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை எடுத்துச் செல்ல அனுமதிக்காதீர்கள். தெரியாத நபர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களுக்கு பதில் அளிக்க வேண்டாம். இதையும் மீறி மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டு பணம் இழந்தால்  1930 என்ற சைபர் குற்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

சைபர் கிரைம்

https://cybercrime.gov.in/   என்ற இணையதளத்திலும் பதிவிடலாம். கிரெடிட் கார்டு ரசீது, வங்கி கணக்கு அறிக்கை, துண்டுப் பிரசுரம், ஆன்லைன் பரிமாற்ற ரசீது, மின்னஞ்சலின் நகல், வலைப்பக்கத்தில் URL, சந்தேகத்திற்குரிய மொலைப் எண் ஸ்கிரீன் ஷார்ட்டுகள்,  வீடியோக்கள், படங்கள் என தாங்கள் வசம் இருப்பவற்றை புகாருடன் இணைக்கலாம். புகாரின் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு முடிந்தவரை புகார் பற்றிய தகவல்களை வழங்கினால் நல்லது. எல்லாவற்றிற்கும் மேலாக பணத்தாசை, பேராசையை தவிர்த்தால் 99 சதவீதம் ஏமாற்றத்தையும் தவிர்க்க முடியும்.” என்றனர்.

வெட்டப்பட்ட விவசாயி உயிரிழப்பு; போலீஸ் ஸ்டேஷன் முன்பு பாடை கட்டி, ஒப்பாரி போராட்டம் நடத்திய மக்கள்

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள ஆம்பலாபட்டு பகுதியை சேர்ந்தவர் தீர்க்கரசு (54). விவசாயியான இவர் தனது நிலத்தை கிரயம் செய்து கொடுத்து, திருகுமார் என்பவரிடம் ரூ.7 லட்சம் கடன் வாங்கியுள்ளார். பணம... மேலும் பார்க்க

போலி ஆவணம் தயாரித்து பல கோடி மதிப்பிலான நிலம் மோசடியா? - போராட்டத்தில் விவசாயிகள்- நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே வள்ளிபுரத்தில் அமாவாசை என்பவருக்குச் சொந்தமான 2.97 ஏக்கர் நிலம் மோகனமூர்த்தி, சரவணக்குமார் ஆகிய சகோதரர்கள் இருவருக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

`மேடம், தம்பியை விட்டுருங்க ப்ளீஸ்'- போலீஸ் ஸ்டேஷன் முன் விஷம் குடித்த சகோதரிகள்; ஒருவர் உயிரிழப்பு!

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி கிராமத்தை சேர்ந்தவர் அய்யாவு. இவருக்கு துர்கா (31), மேனகா (29), கிருத்திகா (27), தினேஷ் (25) என நான்கு பிள்ளைகள். இந்த நிலையில் மது விற்பனை தொடர்ப... மேலும் பார்க்க

`பொம்மை தரேன்’ - 10 வயது சிறுமி, சிறார்வதை செய்யப்பட்டு 6வது மாடிலிருந்து தூக்கி வீசப்பட்ட கொடூரம்

மும்பை அருகில் உள்ள மும்ப்ராவில் உள்ள 10 மாடி குடியிருப்பில் இரவு திடீரென மிகப்பெரிய சத்தம் கேட்டது. உடனே கட்டடத்தில் வசிப்பவர்கள் வெளியில் வந்து என்னவென்று டார்ச் லைட் அடித்து பார்த்தனர். இதில் 10 வய... மேலும் பார்க்க

புதுச்சேரி: `மக்கள் ஏமாந்தது அவர்களுக்கே தெரியவில்லை!’ - `கோ ஃப்ரீ சைக்கிள்’ மோசடி குறித்து போலீஸ்

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட `கோ ஃபிரீ சைக்கிள்’ (Go Free Cycles) என்ற சைக்கிள் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் தன்னுடைய அலுவலகத்தை திறந்தது. அதே வேகத்தில், `புதுச்சேரி வரும் சுற்ற... மேலும் பார்க்க

கோவை: பூட்டிய வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 2 ஆண்கள்; விசாரணையில் வெளியான பின்னணி என்ன?

கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராஜ் (54) மற்றும் மகேஷ் (45). இருவரும் இணைந்து கோவை மாவட்டம், துடியலூர் பகுதியில் பேக்கரி நடத்தி வந்தனர். கடந்த இரண்டு நாள்களாக பேக்கரி திறக்கப்படவி... மேலும் பார்க்க