Dhoni: "தோனி என்னை மரியா ஷரபோவா என்று அழைப்பார்; ஏனெனில்..!" - நினைவுகள் பகிரும்...
கோவை: பூட்டிய வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 2 ஆண்கள்; விசாரணையில் வெளியான பின்னணி என்ன?
கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராஜ் (54) மற்றும் மகேஷ் (45).
இருவரும் இணைந்து கோவை மாவட்டம், துடியலூர் பகுதியில் பேக்கரி நடத்தி வந்தனர். கடந்த இரண்டு நாள்களாக பேக்கரி திறக்கப்படவில்லை.

இதனால் அவர்களுக்குத் தெரிந்தவர்கள் விஷ்வநாதபுரம் பகுதியில் அவர்கள் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளனர்.
அங்கு மகேஷ் கழுத்தறுக்கப்பட்ட நிலையிலும், ஜெயராஜ் தூக்கிட்ட நிலையிலும் சடலங்களாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து துடியலூர் காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் அவர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரின் சடலங்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காவல்துறை விசாரணையில், ஜெயராஜ் மற்றும் மகேஷ் ஆகிய இருவரும் அத்தை மகன் - மாமன் மகன் உறவு முறையைச் சேர்ந்தவர்கள்.

இருவருமே நீண்ட காலமாகத் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தனர். இதனிடையே பன்னீர்மடை பகுதியைச் சேர்ந்த 44 வயது பெண்ணை மகேஷ் திருமணம் செய்துள்ளார்.
இதையடுத்து மகேஷ் தனியாக வாழத் திட்டமிட்டு வாடகைக்கு வீடு தேடி வந்துள்ளார். இதனால் மகேஷ் – ஜெயராஜ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
முதல்கட்ட விசாரணையில், ஜெயராஜ் மகேஷின் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று, அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

பிறகு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று துடியலூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிரேதப் பரிசோதனை முடிவுக்குப் பிறகுதான் முழு விபரம் தெரியவரும் என்றும் கூறியுள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs