ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிகர லாபம் 1.8% உயர்வு!
புதுதில்லி: ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட், மார்ச் காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம், 1.8 சதவிகிதம் உயர்ந்து ரூ.316.11 கோடியாக உள்ளது.
முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.310.63 கோடியாக இருந்தது.
2024-25 நிதியாண்டின் 3-வது காலாண்டில் அதன் லாபம் ரூ.295 கோடியாக இருந்தது என்று ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் தனது ஒழுங்குமுறை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மொத்த வருமானம் முந்தைய நிதியாண்டின் 4-வது காலாண்டில் ரூ.418 கோடியிலிருந்து 24 சதவிகிதம் அதிகரித்து ரூ.518 கோடியாக உள்ளது. அதே வேளையில் மொத்த செலவினங்களும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து ரூ.168 கோடியாக உள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலாண்டில் இது ரூ.103 கோடியாக இருந்தது.
2023-24 ஆம் ஆண்டு நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,604.55 கோடியாக இருந்து தற்போது 2024-25 ஆண்டில் அதன் நிகர லாபம் ரூ.1,612.59 கோடியாக உயர்ந்து உள்ளது.
மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த நிதியாண்டில் நிறுவனம் தலா ரூ.10 ஈக்விட்டி பங்குக்கு 50 காசுகள் ஈவுத்தொகையாக வழங்க பரிந்துரைத்ததுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் பங்குகள் 1.73 சதவிகிதம் உயர்ந்து ரூ.246.45 ஆக முடிந்தது.
இதையும் படிக்க: தொடர்ந்து 4-வது நாளாக சென்செக்ஸ் 1,509 புள்ளிகளும், நிஃப்டி 414 புள்ளிகளுடன் உயர்ந்து முடிவு!