Meerut Murder: பாம்புக் கடியில் இறந்தாரா கணவர்? மனைவி கைது; விசாரணையில் சிக்கியது எப்படி?
மீரட்டை சேர்ந்த அமித் (25) என்பவர் இரவில் உறங்கச் சென்றவர் காலையில் பாம்பு கடித்து இறந்து கிடந்தார். ஆரம்பத்தில் பாம்பு கடித்து இறந்ததாகவே போலீஸாரும் கருதினர்.
மீரட் அருகில் உள்ள அக்பர்பூர் என்ற கிராமத்தில் நடந்த இச்சம்பவத்தில் உயிரிழந்த அமித் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டது.
பிரேதப் பரிசோதனையில் அமித் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது குறித்து அமித் மனைவி ரவிதாவிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, அவர்தான் தனது காதலன் அமர்தீப் என்பவருடன் சேர்ந்து இக்கொலையைச் செய்திருப்பது தெரிய வந்தது.

இது குறித்து மீரட் போலீஸ் அதிகாரி ராகேஷ் குமார் மிஸ்ரா கூறுகையில், ''ரவிதா தனது கணவரின் நண்பர் அமர்தீப் என்பவருடன் திருமணம் தாண்டிய உறவிலிருந்துள்ளார். இது குறித்து அமித்திற்குத் தெரிய வந்தது.
உடனே அமித் தனது மனைவியுடன் அடிக்கடி சண்டையிட்டுள்ளார். இதையடுத்து பிரச்னைக்குத் தீர்வு காணத் தனது கணவரைக் கொலை செய்ய ரவிதா தனது காதலனுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார்.
கொலை செய்ய வேண்டும். ஆனால் அக்கொலையில் சிக்கிக்கொள்ளக் கூடாது என்று இருவரும் நினைத்தனர். இதற்காக 1,000 ரூபாய் கொடுத்து பாம்பு வாங்கினர்.
ஆனால், இரவில் அமித்தைக் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு பாம்பை விட்டுக் கடிக்க விட்டுள்ளனர். அமித் உடம்பில் 10 இடங்களில் பாம்புக் கடி காயம் இருந்தது.
கடித்த பாம்பு அமித் உடம்புக்குக் கீழே மறைந்திருந்தது. ரவிதாவும், அமர்தீப்பும் கைது செய்யப்பட்டுள்ளார்'' என்றார்.
பாம்பு கடிக்கும் முன்பே அமித் கொலை செய்யப்பட்டு இருந்ததால் பாம்பின் விஷம் உடம்பு முழுவதும் பரவாமல் இருந்தது பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்தது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY