MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
திருச்சி: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் இருவர் கைது; பின்னணி என்ன?
திருச்சி மாவட்டம், முசிறி பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு படிக்கும் சகோதரிகள் இருவர் பள்ளிக்கு வந்த நிலையில் மயங்கி உள்ளனர்.
இருவரையும் ஆசிரியர்கள் அதே பகுதியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிறுமிகள் இருவரையும் அனுமதித்துள்ளனர்.
அதேபோல், இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமிகளின் தாயார் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின்பேரில் ஆய்வாளர் வாணி மற்றும் போலீஸார் முசிறி அருகில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வரும் அஜித் (வயது 20), கொத்தனாராக கூலி வேலை பார்த்து வரும் கேசவன் (வயது 23) ஆகியோர் சிறுமிகளிடம் பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபட்டதாக விசாரணை மூலம் கண்டறிந்தனர்.
அதனைத்தொடர்ந்து, இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
முசிறி அருகே அரசுப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இரண்டு பேர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb