ஜடேஜா, துபே, ஆயுஷ் மாத்ரே அதிரடி! மும்பைக்கு 177 ரன்கள் இலக்கு
மும்பை: ஐபிஎல் 38-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற 177 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வான்கடே திடலில் எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் திரட்டியது.
அணியில் அதிகபட்சமாக ஷிவம் துபே 32 பந்துகளில் 50 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 35 பந்துகளில் 53 ரன்களும் குவித்தனர். அறிமுக வீரர் ஆயுஷ் மாத்ரே தன் பங்கிற்கு 15 பந்துகளில் 32 ரன்களை அதிரடியாக திரட்டியதால் சென்னை அணியால் மும்பைக்கு சவாலான இலக்கை நிர்ணயிக்க முடிந்தது.