MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
சென்னை அணியில் 17 வயது இளம் வீரர் அறிமுகம்! சீனியர் வீரருக்கு ஓய்வு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ராகுல் திரிபாதிக்கு இன்றைய ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக 17 வயது இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே சென்னை அணிக்காக தமது முதல் ஐபிஎல் ஆட்டத்தில் அறிமுக வீரராக களமிறக்கப்பட்டுள்ளார்.
மும்பையை சேர்ந்த வலது கை ஆட்டக்காரரான ஆயுஷ் மாத்ரே மாற்று வீரராக சென்னை அணியில் புதிய வரவாக சேர்க்கப்பட்டுள்ளார். காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் ருதுராஜ் கெய்க்வட்க்கு பதிலாக ஆயுஷ் மாத்ரே அணியில் இணைந்துள்ளார்.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் பேட்டிங்கில் மிரட்டிய ஆயுஷ் மாத்ரே, 19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணியில் நன்றாக விளையாடி ரன்களை திரட்டி கவனத்தை ஈர்த்தவர். இந்தநிலையில், அவர் மீதான மிகுந்த நம்பிக்கையால் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அவரை தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் ஆட்டங்களில் பெரிதாக சோபிக்காத திரிபாதி மீது சென்னை அணி நம்பிக்கையை இழந்ததன் காரணமாகவே, மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான இன்றைய ஆட்டத்தில் ஆயுஷ் மாத்ரேவுக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.