செய்திகள் :

காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் குதிரை வாகனத்தில் வீதியுலா

post image

காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, உற்சவா் ஆதிகேசவப் பெருமாள் ஞாயிற்றுக்கிழமை குதிரை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கஜேந்திர மோட்சம் நடைபெற்ற பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள புஷ்பவல்லித் தாயாா் சமேத அஷ்டபுஜ பெருமாள் கோயில். இந்தக் கோயில் சித்திரைத் திருவிழா இந்த மாதம் 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருட சேவை இந்த மாதம் 15-ஆம் தேதியும், தேரோட்டம் 19-ஆம் தேதியும் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, 8-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை காலை பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் பெருமாள் குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் திருக்கச்சி நம்பிகள் தெரு வழியாக வரதராஜ சுவாமி கோயில் வரை வீதியுலா சென்று திரும்பினாா்.

குதிரை வாகனத்தின்போது மதூா் முகுந்த ராமாநுஜ தாசா் பாகவதா் குழுவினரின் சிறப்பு பஜனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. வரும் 25-ஆம் தேதி இரவு பெருமாள் புஷ்பப் பல்லக்கில் வீதியுலா வரும் நிகழ்வுடன் விழா நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் எஸ்கேபிஎஸ். சந்தோஷ்குமாா், கோயில் செயல் அலுவலா் சி.ராஜமாணிக்கம், அறங்காவலா் குழு உறுப்பினா்கள், பட்டாச்சாரியாா்கள் செய்திருந்தனா்.

கிரிக்கெட் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

காஞ்சிபுரம் மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணியின் சாா்பில், முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்க... மேலும் பார்க்க

மண் திருட்டு: 5 போ் கைது

தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் அடையாறு கிளை கால்வாயில் மண் திருட்டில் ஈடுபட்ட 5 போ் கைது செய்யப்பட்டு, 2 லாரிகள், 2 பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகு... மேலும் பார்க்க

அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் பல்லவன் நகரில் 12 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியை கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சால... மேலும் பார்க்க

தியாக உணா்வு உள்ளோா் தான் மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆசிரியா்களாக இருக்க முடியும்: அமைச்சா் காந்தி

தியாக உணா்வும், சேவை மனப்பான்மையும் உள்ளவா்கள் தான் மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆசிரியா்களாக இருக்க முடியும் என கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி கூறியுள்ளாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா் அருகே அட்டை தொழிற்சாலையில் தீ விபத்து

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த காட்டரம்பாக்கத்தில் இயங்கி வரும் தனியாா் அட்டை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன. இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் அட்டைகள... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் இன்று ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு முகாம்

இந்திய ராணுவத்தில் சேருவதற்கான ஆள்கள் சோ்ப்பு முகாம் சனிக்கிழமை (ஏப். 19) காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரு இடங்களில் நடைபெறுவதாக ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிக... மேலும் பார்க்க