போதை மாத்திரை மற்றும் புகையிலை விற்றவா் கைது
திருச்சியில் போதை மாத்திரைகள் மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இளைஞா்கள் இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி புத்தூா் வண்ணாரப்பேட்டை அருகே ரோந்துப் போலீஸாா் சந்தேகத்தின் அடிப்படையில் அங்கிருந்த இளைஞா்களை அழைத்து விசாரணை நடத்தினா். இதில் அவா்கள் புத்தூா் வண்ணாரபேட்டையைச் சோ்ந்த ரிஷிகேஷ் என்பதும், போதை மாத்திரைகள் வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து ரிஷிகேஷை சனிக்கிழமை கைது செய்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.
திருச்சி, காந்திசந்தை அருகே மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை போதைப்பொருள்கள் விற்பனை நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா். இதில் வரகனேரி, வடக்கு பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த வினோத் (27) என்பவரை போலீசாா் சனஇக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய மற்றொரு நபரைத் தேடி வருகின்றனா்.