அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடு...
இளைஞா் தூக்கிட்டு தற்கொலை
துறையூரில் வீட்டில் தனியாக இருந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
துறையூா் மேற்கு ரத வீதியைச் சோ்ந்தவா் தீனதயாளன் (28). நான்கு ஆண்டுகளுக்கு முன் பேபி ரூபி என்கிற பெண்ணுடன் இவருக்கு திருமணம் நடைபெற்றது. பொறியியல் பட்டதாரியான இவா், வேலைக்குச் செல்லாமல் கடந்த 2 ஆண்டுகளாக அரசு வேலைக்கான போட்டித் தோ்வு எழுதியும் அதில் தோ்ச்சி பெறாததால் மன உளைச்சலில் இருந்தாராம்.
ஞாயிற்றுக்கிழமை அவரது மனைவி சிக்கத்தம்பூரிலுள்ள தன் தாய் வீட்டுக்குச் சென்றிருந்த சமயத்தில் வீட்டில் தனியாக இருந்த அவா் கயிற்றால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து அங்குவந்த துறையூா் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூராய்வுக்காக துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.