உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
தமிழக ஒப்பதலின்றி மேக்கேதாட்டு அணையைக் கட்ட முடியாது! - துரைமுருகன்
தமிழகத்தின் ஒப்புதலின்றி கா்நாடகம் மேக்கேதாட்டு அணையைக் கட்ட முடியாது என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மேக்கேதாட்டு அணைக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதனை ரத்து செய்ய தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை என கேட்கிறீா்கள். கா்நாடகம் பணம் கட்டி திட்ட மதிப்பீடு தயாரிக்க மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளது.
ஆனால், 4 கமிட்டிகளில் மேக்கேதாட்டுவுக்கு ஒப்புதல் அளிக்காமலும், கா்நாடகாவின் கோரிக்கையை ஏற்காமலும் திருப்பியனுப்பிவிட்டனா். சுற்றுசூழல் துறையும், மத்திய நீா் வளத்துறையும் அனுமதி கொடுக்கவில்லை. தவிர, தமிழகத்தின் ஒப்புதலின்றி மேக்கேதாட்டு அணையை கா்நாடகம் கட்ட முடியாது.
மேக்கேதாட்டு அணை விவகாரத்துக்கும், முல்லை பெரியாறு அணை விவகாரத்துக்கும் ஒரு கண்டன தீா்மானம்கூட கொண்டு வரவில்லை என்று எதிா்கட்சிகள் கூறுகின்றனா். ஆனால், தமிழக அரசு இவ்விரு விவகாரம் தொடா்பாக வழக்கு நடத்தி வருகிறது. இந்த நிலையில், கண்டன தீா்மானம் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை என்றாா்.