உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
‘ஏசி’ மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்கலாம்! - தெற்கு ரயில்வே
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஏசி புறநகா் மின்சார ரயிலின் நிறை, குறைகளை பயணிகள் தெரிவிக்கலாம்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே பயணிக்கும் பணியாளா்கள், மாணவா்களின் வசதிக்காக புதிய ஏசி மின்சார ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் பயணிகள் அதிகம் பயணிக்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், ரயிலின் நேரம் மற்றும் இயக்கம் குறித்து பயணிகள் 63747 13251 எனும் ‘வாட்ஸ்ஆப்’ எண்ணில் தெரிவிக்கலாம். கருத்துகளை ஒலி வடிவில் பதிவிடாமல், எழுத்து வடிவில் மட்டும் பதிவிட வேண்டும். தெற்கு ரயில்வேயின் எக்ஸ் தளப் பக்கத்தில் இணையதள பக்கமும் கொடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.